Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th June 2018 10:22:22 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மரநடுகை நிகழ்வு

தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மரநடுகை நிகழ்வு கடுகெலிய பெட்டாலியன் பயிற்சி முகாம், பனாகொட இராணுவ வைத்தியசாலை, அபிமங்சல 2, 3 மையங்கள், அலவ்வ ரணவிரு எபரல், இலங்கை பீரங்கிப் படையணி தலைமையகம், இராணுவ பொது சேவை படையணி தலைமையகம், இராணுவ மின்சார பொறியியலாளர் படையணி தலைமையகம், இராணுவ பொலிஸ் படையணி தலைமையகம், போர் கருவி படையணி தலைமையகம், இராணுவ புலனாய்வு படையணி தலைமையகம் மற்றும் இராணுவ தேசிய பாதுகாப்பு படையணி தலைமையகங்களில் இராணுவத்தினரது பங்களிப்புடன் இடம்பெற்றன.

கடுகெலிய பெட்டாலியன் பயிற்சி முகாம்களில் விளாமரம், பர்மா, மான், கும்புக், ஹால்மிலா, கோன், மதன், வெலன், பிஹம்பியா, பர்மா தேக்கு, மார்கோசா, பலா, ஹாக் ப்ளம், சுண்ணாம்பு, எலுமிச்சை, ஸ்டார் பழம், பேலி, பூமேகனேட், கூச்பெர்ரி மற்றும் மாங் கன்றுகள் உட்பட் 250 மரங்கள் நடப்பட்டன.

கம்புறுபிட்டி, பாங்கொல்ல அபிமங்சல மையங்கள், பனாகொட இராணுவ வைத்தியசாலை வளாகத்தினுள் 300 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

கரந்தெனியவில் அமைந்துள்ள இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்தில் ஜீன் மாதம் 2, 3 ஆம் திகதிகளில் இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்களது பங்களிப்புடன் பயண்படக்கூடிய மரக்கன்றுகள் 50 நடப்படும் நிகழ்வு தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றன.

அலவ்வ ரணவிரு எபரல் நிலையத்தின் வளாகத்தினுள் 100 மரக்கன்றுகள் இராணுவத்தினரால் நடப்பட்டன.

6 இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியினால் சோமாவடிய, கண்டக்காடு பண்ணைகளில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் 1 ஆவது பொது சேவைப் படையணி பண்ணலுவ பண்ணைகளில் சிரமதான பணிகளும், 4 ,5 மற்றும் 2 ஆவது பொது சேவைப் படையணிகளில் சிரமதான பணிகள் மற்றும் கருத்தரங்குகள் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இடம்பெற்றன.

jordan Sneakers | Archives des Sneakers