Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th March 2018 23:59:11 Hours

முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை கிரிக்கட் அணியினருக்கு இடையிலான போட்டிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 59, 592 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு கிரிக்கட் அணியினருக்கு இடையிலான 20 – 20 ஓவர் போட்டிகள் முல்லைத்தீவில் (08) ஆம் திகதி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.ன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர்ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது எண்ணக் கருவிற்கமைய முல்லைத்தீவு விதயானந்த விளையாட்டு மைதானத்தில் பெரும்பாலான பார்வையாளர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

முல்லைத்தீவு கிரிக்கட் அணியானது 09 விக்கட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை பெற்று வெற்றியை சுவீகரித்து கொண்டது. இவர்களை எதிர்த்து விளையாடிய ஹம்பந்தோட்ட கிரிக்கட் அணியானது 8 விக்கட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது.

15 ஓட்டங்களில் 2 விக்கட்டுகளை வீழ்த்தி திறமையாக விளையாடிய ஹம்பாந்தோட்டை அணியின் பீ.கே லக்‌ஷ்மன் சிறந்து பந்து வீச்சாளராக இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். முல்லைத்தீவு கிரிக்கட் அணியிலிரிருந்து சிறந்நத துடுப்பாட்டு விரனாக அருனாசலம் ஆனந்தன் தெரிவு செய்யப்பட்டார்.

59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ருவன் வணிகசூரிய அவர்களது ஏற்பாட்டில் 592 ஆவது படைத் தளபதி கேர்ணல் சானக ரத்னாயக அவர்களது மேற்பார்வையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

இப் போட்டிகளுக்கு நடுவர்களாக வவுனியா மாவட்ட கிரிக்கட் சங்கத்தின் நடிவர்களான ஆரியரத்னம் ரவிகரன் மற்றும் ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு அவர்களது தலைமையில் விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக 59 ஆவத் படைப் பிரிவின் படைத் தளபதி பிரகேடியர் வருகை தந்தார். அத்துடன் முல்லைத்தீவு வலய பணிப்பாளர் சுந்தரலிங்கம் பிரபாகரன், முல்லைத்தீவு வித்யானந்த வித்தியாலயத்தின் அதிபர் கே. சிவலிங்கம், ஹம்பாந்தோட்ட மாவட்ட விளையாட்டு தலைவர் வைத்திய சஞ்ஜய ஹேரத் அவர்கள் இணைந்திருந்தனர்.

Sports brands | Womens Shoes Footwear & Shoes Online