Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th June 2018 10:00:15 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படையினருக்கு தற்பாதுகாப்பு கலை பயிற்சிகள்

கிழக்கு பாதுகாப்பு படைத்தலைமையக படை வீரர்கள் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த மொத்தமாக 3 அதிகாரிகள் மற்றும் 60 படை வீரர்களுக்கு தற்பாதுகாப்பு கலை பயிற்சிகள் ஜீன் மாதம் 07 ஆம் திகதி ஆரம்பமானது.

23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சூல அபேநாயக அவர்களின் தலைமையில் பூனானை முகாமில் இடம்பெற்றன.

இந்த தற்பாதுகாப்பு கலை பயிற்சிகள் முதலாவதாக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துஷித்த பனன்வல அவர்களது எண்ணக் கருவிற்கமைய படையினரது மனத் தைரியத்தை சக்தியூட்டும் நோக்கத்துடன் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்து படை வீரர் மற்றும் வீராங்கனைளுக்கு இந்த பயிற்சிகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் வழங்கப்பட்டன.

பயிற்சிகளினூடாக சுய பாதுகாப்பு (RBSD) பயிற்சி தொகுதி ஆக்கிரமிப்பு கூட்டங்கள் மற்றும் தனிநபர்களுடன் ஈடுபாட்டிற்கு முகமளித்தல்,. குழுக்கள் தகவல், நுண்ணறிவு-சேகரித்தல், செயல்பாடுகள் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 23 படைப் பிரிவில் 4 தற்பாதுகாப்பு பயிற்சிகள் தற்பொழுது நிறைவடைந்துள்ளது. இந்த பயிற்சிகள் அனைத்தும் 1 ஆவது கொமாண்டோ படையணியினால் மேற்கொள்ளப்பட்டன..

Nike Sneakers | yeezy sole turning blue color shoes FX6794 FX6795 Release Date - nmd legion ink goat costume ideas for boys