Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2018 13:29:25 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 622ஆவது படையிர் தமது ஆண்டுப் பூர்தியை கொண்டாடினர்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59ஆவது படைத் தலைமையகம் தமது 11ஆவது ஆண்டு பூர்தியை கடந்த சனிக் கிழமை (11) 59ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்களின் தலைமையில் கொண்டாடியது.

இதனைத் தொடர்ந்து பௌத்த மத வழிபாடுகள் மற்றும் உயிர்நீத்த படையினரை நினைவு கூறும் நிகழ்வுகள் போன்றன இப் படைத் தலைமயகத்தில் கடந்த (30) இடம் பெற்றது.

இதன் போது இப் படைத் தளபதியவர்கள் 1ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையினர் 8ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையினர் மற்றும் 19ஆவது கெமுனு ஹேவா படையனிகளைச் சேர்ந்த 08 அதிகாரிகள் உள்ளடங்களாக 83 அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன் போது மரநடுகை நிகழ்வுகளும் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 622ஆவது படைப்பிரிவினர் தமது 08ஆவது ஆண்டு பூர்த்தியை கடந்த சனிக்கிழமை (01) கொண்டாடினர்.

இதனைத் தொடர்ந்து ஜனாகபுர கிரிபன்னாவை ஹெலபெவவ மற்றும் சிங்கபுர போன்ற பிரதேசங்களில் உள்ள விகாரைகளில் சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. அதனதை; தொடர்ந்து விசேட பௌத்த மத வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

அன்றன தினம் 622ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் சாலிய அமுனுகம அவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகள் இப் படையினரால் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 9 மற்றும் 20ஆவது கஜபா படையினரின் நலன் கருதி புதிய உணவகமும் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கட்டளை அதிகாரிகள்; உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். Best Nike Sneakers | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals