Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th June 2018 09:32:03 Hours

முல்லைத்தீவு படையினரின் ‘சகசக் நிமுவென் ‘ புதிய கண்டுபிடிப்பு கண்காட்ச்சி – 2018

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் வழிகாட்டலின் கீழ் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர்களின் திறமையை வெளிக்காட்டும் நிமித்தம் இந்த ‘சகசக் நிமுவூன் கண்டுபிடிப்பு கண்காட்ச்சி (6) ஆம் திகதி புதன் கிழமை பாதுகாப்பு படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில் படையினர்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர்களின் படைப்பாற்றலால் உருவாக்கப்பட்ட 35 பொறுட் ‘சகசக் நிமுவூன் கண்டுபிடிப்பு கண்காட்ச்சிக்கு பிரதான அதிதியாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் வருகை தந்து மங்கள விளக்கேற்றி இக் கண் காட்ச்சியை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஆராய்ச்சி ஆய்வுகள் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி கிளைப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.ஆர்.பீ.ரொவெல் அவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்ச்சியானது படையினர்களின் திறமையை அதிகரிக்கவும் புது சிந்தனை மற்றும் ஆக்கப்பூர்வமான தொழிநுட்ப வளர்ச்சியை மேம்படுத்தவதற்காகவும் இந்த கண்காட்ச்சி ஏற்பாடுசெய்யப்பட்டனர்.

இந் நிகழ்வின் கண்காட்ச்சியில் மூன்று அபூர்வமான கண்டுபிடிப்புகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அனைத்து 35 கண்டுபிடிப்பாளர்களுக்கும் பாராட்டுக்களும் பணமும் பரிசாக வழங்கப்பட்டனர்.

இந் நிகழ்வுக்கு ரஜரட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான விஞ்ஞான பிரிவின் வைத்தியர் புபுது தர்ஷனா மற்றும் விவசாய பீடத்தின் வைத்தியர் ஜி.ஏ.சி. ஜினிகந்தர மற்றும் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்களும் இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ தலைமையகத்தின் ஆராய்ச்சி பகுப்பாய்வு மற்றும் மேம்பாட்டுக் கிளையின் அதிகாரிகளும், இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.

Best Sneakers | Air Jordan Release Dates Calendar