Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th July 2017 19:53:07 Hours

முல்லைத்தீவில் 189 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

பொதுமக்களது பிரச்சினைகளை கண்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவாட்ட அரசியல்வாதிகள்,முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்தினால் பராமரித்து வந்த 189 ஏக்கர் காணிகள் இன்றைய தினம் (19)ஆம் திகதி விடுவிக்கப்பட்டது.

இந்த இடம் விடுவிப்பதன் நிமித்தம் இடம்பெயர்ந்த குடும்பங்களின் பெரும்பாலானோர் கேப்பாப்புலவில்தமது காணிகளிலே குடியிருக்கு கூடிய நிலைமை உருவாகியுள்ளது.

இதற்கு முன்பதாக 2017ஆம் ஆண்டு முல்லைத்தீவு மக்களது மனிதாபிமான பிரச்சினையை கவனத்தில் கொண்டு கேப்பாபுலவு 25 பொதுமக்களுக்கு 243 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு பொது பதவிநிலை பிரதானி பிரிகேடியர்,முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ஆர் கேதிஸ்வரன் முன்னிலையில் கேப்பாப்புலவில் உள்ள 189 ஏக்கர் விஸ்தீரணமான தனியார் காணிகள் மீண்டும் அவற்றின் முன் உரித்தாளர்களிடத்தில் கையளிக்கப்பட்டதாக கரைதுறைபற்று பிரதேச செயலகம் அதிகாரபூர்வமாக தெரிவித்தது.இந்த நிகழ்விற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்து கொண்டார்.

Sports Shoes | balerínky