Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th June 2017 13:16:22 Hours

முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் இணைந்து நல்லினக்க சக்தி கலாச்சார நிகழ்வு

முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள வீரர்களது சேவையை பாராட்டும் பொருட்டு நல்லினக்க சக்தி கலாச்சார நிகழ்வு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில் மே மாதம் (14) ஆம் திகதி மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம் பெற்றது.

ஓவ்வொரு வருடமும் மேமாதம் 19 ஆம் திகதி இடம் பெறும் வெற்றிவிழா கொண்டாட்டத்திற்கு பதிலாக மேன்மை தங்கிய ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த கலாச்சார நிகழ்வு பாதுகாப்பு அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

முப்படை, பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டு இந்த கலாச்சார நிகழ்வு கடந்த வருடம் நல்லினக்க போராட்டம் எனும் தலைப்பில் இடம் பெற்றது.

இந்த கலாச்சார நிகழ்வின் ஊடாக பாதுகாப்பு படை அங்கத்தவர்கள் தாய் நாட்டின் கலாச்சாரம், தற்பொழுதைய அபிவிருத்தி, வெளிநாட்டு தொடர்புகளுடன் உள்ள தொடர்பு மற்றும் விஷேட கலை நிகழ்ச்சிகளை முன் வைத்துள்ளனர்.

இந் நிகழ்வில் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், மற்றைய அமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள், ரனவிரு சேவை அதிகார சபையின் தலைவி, முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு அங்கவீன முற்றபடை வீரர்களும் கலந்துகொண்டனர்.

Buy Kicks | adidas Campus 80s South Park Towelie - GZ9177