Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd February 2019 14:07:05 Hours

மாலித் தாக்குதலின் போது பலியான இராணுவ வீரர்களது சடலங்கள் (04) ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள்

மாலி ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் பணியாற்றும் போது மாலியில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த இரண்டு இராணுவப் போர் வீரர்களின் சடலங்கள் (04) ஆம் திகதி திங்கள் கிழமையன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 3.00 மணியளவில் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் தெரிவித்துள்ளார்.அத்துடன் இலங்கை ஐ.நா.வின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி ஹனா சிங்கர், பணியகத்தினர், படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடந்த 2019 ஜனவரி மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலின் போது பலியான 11 ஆவது இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் எச்.டபில்யூ.டீ ஜயவிக்ரம மற்றும் மற்றும் 1 ஆவது பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த சாஜன் எஸ்.எஸ் விஜயகுமார ஆகியோர்களின் குடும்பத்தினரும் கலந்து கொள்ள உள்ளன.

அத்துடன் MINUSMA படைத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் டென்னிஸ் ஜிலிஸ்போர் ஒரு சில MINUSMA அதிகாரிகளோடு இலங்கையும் உட்பட மாலியில் உள்ள ஐ.நா. கொடிகளும் இணைத்துக் கொண்டுள்ளார். அந்த வகையில் விமானம் ஏற்பாடுகளில் (04) ஆம் திகதி திங்கட் கிழமை வரை தாமதம் என்று வெளிநாட்டு நடவடிக்கைகள் பணியகம் மற்றும் இராணுவ தலைமையகம் தொரிவித்துள்ளது. Sport media | Air Jordan