Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th December 2017 09:47:35 Hours

மத்தெகொடயில் அமைந்திருக்கும் பொறியியளாலர் படைத் தலமையகத்தின் புதிய உணவு சாலை திறந்த வைப்பு

இலங்கை இராணுவ பொறியியளாலர் படைத் தலமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரனசிங்க அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் இராணுவ பொறியியளாலர் படைத் தலைமையகத்துக்கு புதன்கிழமை (27) ஆம் திகதி வருகை தந்தார்.

இதனைத் தொடர்ந்து இப்படைத் தலைமையகத்தில் பதிதாக அமைக்கப்பட்ட 5பில்ட் பொறியியளாலர் சப்பர்ஸ் உணவு சாலையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து இப் படை தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரனசிங்க மற்றும் பொறியியளாலர் படை தலைமையகத்தின் பிரிவின் மேஜர் ஜெனரல் டட்லி வீரமன் அவர்களினால் வரவேற்கப்பட்டதோடு அதனைத் தொடர்ந்து இப்படைத் தலைமையகத்தினரால் இராணுவ தளபதியவர்களுக்கு வரவேற்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து தலைமையகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட பௌத்த மாத பூஜையிலும் கலந்து கொண்டார்.

புதிதாக அமைக்கப்பட்ட இக் கட்டிடம் 4-5 மாத காலத்துக்குள் மிக நவீன முறையில் அமையப்பட்டிருந்தது.இதில் சமையலறை மற்றும் அனைத்து படையினரும் பயன்படுத்தும் வயில் விசாலமான உணவுசாலையும் அமைக்கப்பட்டிருந்தது.ஒரு சுப வேலையில் இராணுவ தளபதி அவர்கள் இப் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து பார்வையாளர்களையும் கவரும்வகையில இராணுவ பயிற்ச்சி பெற்ற துப்பறியும் நாய்களின் சகாச நிகழ்வும் இடம் பெற்றன.

இந்த நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் மற்றும் 143 படையினர்களும் (CBRN), இரசாயன> உயிரியல்> கதிர்வீச்சி மற்றும் அணுசக்கி பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இப்படைத் தலைமையகத்துக்கு இராணுவ தளபதி விஜயம் செய்ததன் நினைவாக இப்படைத் தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நடும் நிகழ்வும் இடம் பெற்றது.

அதன்பின்னர் இராணுவ தளபதியவர்கள் அதிகாரிகள் மற்றும் படையினர்கலோடு அவர்களின் நல்வாழ்வு பற்றியும் பல கருத்துகளையும் பாகிர்ந்து கொண்ட அவர் குழு புகைப்படத்திலும் கலந்து கொணடார்.

நிகழ்வின் முடிவில் படைத் தளபதியவர்கள் இராணுவ தளபதிக்கு நன்றிகளை தெரிவத்துக் கொண்டதுடன் தளபதியின் வருகையை நினைவுபடுத்துவதற்காக நினைவுசின்னம் ஒன்றும் வழங்கப்பட்டதும் பார்வையாளர்களின் பதிவு புத்தகத்தில் கையொப்பமும் வைத்தார்.

இந்த நிகழ்வில் இராணுவ பொறியியளாலர் படையணியின் படைத் தளபதி; தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரனசிங்க> சிரேஷ்ட அதிகாரிகளும் பொறியியளாலர் படையணியின் படையினரும் கலந்து கொண்டனர்.

bridge media | Jordan Ανδρικά • Summer SALE έως -50%