Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th May 2018 16:45:39 Hours

போயகனையில் விஜயபாகு மோட்டர்குரோஸ் 16 ஆவது போட்டி

இலங்கை இராணுவத்தில் மேலும் ஒரு மோட்டர் சைக்கிள் போட்டியாக விஜயபாகு மோட்டர்குரோஸ் -2018 க்காக விஜயபாகு காலாட் படையணி மற்றும் இலங்கை மோட்டர் ஓட்டுனர் சங்கத்தினர் இணைந்து 16 ஆவது தடவையாக குருநாகல் போயகனையில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படையணியில் ஏற்பாடு செய்யப்பட்ட்டுள்ளது. இந்த மோட்டர் பந்தய போட்டிக்காக உள்நாட்டு வெளிநாட்டு போட்டியாளர்கள் 80 க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ள்ளவுள்ளனர், இப் போட்டி ஜூன் மாதம் 17 ஆம் திகதி இடம் பெறும் என்று (25) ஆம் திகதி கொழும்பு மிராஜ ஹோட்டலில் நடைப் பெற்ற ஊடக சந்திப்பில் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவன அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் சவாலுடன் எதிர்கொள்ளும் இப் போட்டியில் நாட்டில் இருக்கும் அனைத்து மோட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் போட்டியாளர்கள் போட்டியிட எதிர்பார்க்கும் நிமித்தம் விஜயபாகு மோட்டர்குரோஸ் -2018 க்கான போட்டிகள் ஒரு இயற்கை வளமும் வரலாற்று மற்றும் தத்துவ நிறைந்த எதுகல்புர போயகனை மோட்டர் ஓட்டும் பூமியல் நடைப் பெற இருக்கின்றது.

அத்துடன் விஜயபாகு காலாட் படையணியின் உயிர் நீத்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் குடும்பத்தினர்களுடன் தற்போது சேவையில் இருக்கும் அனைத்து வீரர்களும் மற்றும் சிவல் ஊழியர்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நலன்புரி வசதிகளை வழங்குவதற்காக நிதி ஆண்டுதோறும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சவாலுக்கான போட்டி நிகழ்வுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட மோட்டர் வாகனம் ஒவ்வொரு அம்சத்திலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் மற்றும் பந்தய போட்டிகளின் தரம் அத்துடன் வெளிநாட்டு ஓட்டுனர் போட்டியாளர்களின் உற்சாகம் மற்றும் ஈர்ப்பும் கொண்டுள்ளனர்.

ESER மார்க்கெட்டிங், இலங்கை இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ஹட்ச் டெலிகொம், அலியாகம்பெனி மற்றும் இலங்கை ரூபாய் கூட்டுறவு சங்கம் போனறோர் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

வட மாகணத்தில் மற்றும் நாடு முழுவதிலும் இந்த மோட்டார் பந்தயக் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் விஜயபாகு மோட்டர்குரோஸ் போட்டிகள் 2000 ஆம் ஆண்டு இலங்கை இராணுவ வீரர்களுடன் ஆரம்பிக்கப்பட்டனர். 2009 மே மாதம் தீவிர வாதத்துடன் போர் செய்து போரில் வெற்றி பெற்ற விஜயபாகு காலாட்படைப் போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன்களுக்கு நிதி வழங்கப்பட்டது.

கடந்த காலங்களில் இடம் பெற்ற விஜயபாகு மோட்டர்குரோஸ் போட்டியில் பெரும்பாலாவர்களின் மோட்டர் ஓட்டும் போட்டியாளர்களின் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ததுடன் ஷெஹான் சி அதிகாரி, இஷான் திஸாநாயக்க, ஐவன் பி குருசிங்க, சமீர பிரேமரத்ன, நிஹால் விஜேரத்ன, லஹிரு ஜீவன்ந்த, புத்திக சில்வா, ஜாஸ் குணவர்தன, கயன் சந்தருவன் போன்ற இந் நாட்டு போட்டியாளர்கள் மற்றும் இந்தியா மற்றும் ஜப்பானை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டு வீரர்கள் உட்பட 80 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். முந்தைய போட்டிகளில் பார்த்தால் விஜயபாகு காலாட்படைப் பிரிவில் அமைப்பின் வலிமை நன்கு அறியப்பட்டுள்ளது. இந்த போட்டியை ஓழுங்கமைப்பதற்கு படைப்பிரிவின் தளபதி மற்றும் அனைத்து படைப் பரிவுகளிக் கட்டளை தளபதிகளும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதற்கு முன் நடைப் பெற்ற போட்டிகளில் கிடைக்கப்பட்ட நிதிகளில் விஜயபாகு காலாட் படையணியின் படையினர்களுக்கு தங்கும் விடுதி, அதிகாரிகள் மற்றும் படையினர் வளர்ச்சிக்கு உடற்கட்டமைப்பு, வீடுகள், படையினர்களின் குழந்தைகளுக்கு கணினிகள், மற்றும் உதவிகள் அதிகாரிகள் படையினருக்காக விழையாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், , புனித நூலகம் மற்றும் ஒரு விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இந்த வசதிகள் வடமேல் மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளின் வேண்டு கோளுக்கிணங்க பல வசதிகள் வழங்க்பபட்டது.

இந்த ஊடக சந்திப்பில் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியும் இராணுவ பிரதி பதவி நிலை பிரதாணியுமான மேஜர் ஜெனரல் அஜத் காரிய கரவன மற்றும் புத்தல அதிகாரிகள் மேம் பாட்டு தினைக்கழத்தின் அதிகாரியான பிரிகேடியர் சந்தன குனவர்தன தலைமையகத்தின் அதிகாரியான பிரிகேடியர் ஆரிய சிங்க உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.

latest Nike release | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals