Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th December 2018 12:33:22 Hours

புத்தளத்தில் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இடம்பெற்ற நத்தார் நிகழ்வு

புத்தளத்தில் வாழும் காப்பிலி இனத்தைச் சேர்ந்த நபர்களது பங்களிப்புடன் இராணுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நத்தார் கெரோல் நிகழ்வு (28) ஆம் திகதி மாலை புத்தளம் புனித மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியயாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார். இவரை 143 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தம்மிக திசாநாயக அவர்கள் வரவேற்றார்.

பின்னர் இ்ந்த நத்தார் தின நிகழ்வில் வரவேற்புரை 143 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தம்மிக திசாநாயக அவர்ககளினால் ஆற்றப்பட்டன.

அதன் பின்னர் இராணுவ இன்னிசைக் குழுவினர் மற்றும் இந்த காப்பிலி இனத்தவர்களின் நத்தார் கீதங்கள் இந்த நிகழ்வில் இசைக்கப்பட்டன.

இந்த காப்பிலிகள் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துகீசிய படையெடுப்பாளர்களால் முதன்முதலாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. இவர்களின் வம்சாவலியில் வந்த இந்த இனத்தவர்கள் இப்பொழுது புத்தளத்தில் வசித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்த நிகழ்வின் போது இராணுவ தளபதி அவர்களினால் காப்பலி இனத்தைச் சேர்ந்த சிறார்களுக்கும், பெரியார்களுக்கும் நத்தார் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நத்தார் தின நிகழ்வில் அருட்பணி கெனடி அடிகளார், பாஸ்டர்கள், அருட் சகோதரிகள், மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக அவர்கள் இணைந்திருந்தனர்.latest Nike Sneakers | Air Jordan