Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd December 2017 10:22:11 Hours

புத்தள அதிகாரிகள் சேவை முன்னேற்ற ஊக்குவிப்பு மத்திய நிலையத்தில் இடம் பெற்ற அதிகாரிகளுக்கான கருத்தரங்கு

புத்த அதிகாரிகள் சேவை முன்னேற்ற ஊக்குவிப்பு மத்திய நிலையத்தில் படையினரின் நவீன மயமமாக்கப்பட்ட பாதுகாப்பு சூழலுக்கான மாற்றத்தகு தன்மை தொடர்பான கருத்தரங்கானது இம் மத்திய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை (21) இடம் பெற்றது.

இந் நிகழ்வில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன் போது சேவை முன்னேற்ற ஊக்குவிப்பு மத்திய நிலையத்தின் தளபதியான பிரிகேடியர் சந்தன குணவர்தன அவர்கள் கலந்து கொண்டு தமது வரவேற்புரையை நிகழ்த்தினார்.

பின்னர் இராணுவத் தளபதியவர்கள் இக் கருத்தரங்கில் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந் நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் கேர்ணல் , லெப்டினன்ட் கேர்ணல் , மற்றும் மேஜர் போன்ற பதவிகளில் உள்ள அறுபத்து நான்கு (64) உயர் அதிகாரிகள் 2017ஆம் ஆண்டிற்கான 2ஆம் கட்ட கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் இந் நிகழ்வில் உயர் விரிவூரையாளர்களான சேர் ஜோன் கொத்தலவளைப் பல்கலைக் கழகத்தின் மூலோபாய ஆய்வுத் துறையின் பேராசிரியர் அமல் ஜயவர்தன மற்றும் மேலான்மைத் துறைக் கல்வியின் விரிவூரையாளரான வைத்தியர் லக்ஷிகா லியணகே போன்றௌரால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

டிசெம்பர் 21 முதல் 22ஆம் திகதி வரை ஐந்து பாடநெறி அம்சங்கள் கேள்விகள் விடைகள் உள்ளடங்களான இடம் பெறும்.

இதன் போது இம் மத்திய நிலையத்தின் அதிகாரி மற்றும் இராணுவத் தளபதி போன்றோரால் தமது கருத்ததுக்கள் முன்வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இறுதியில் இராணுவத் தளபதியவர்கள் இம் மத்திய நிலையத்தின் கட்டிட வேலைப்பாடுககின் கண்காணிப்பிலும் ஈடுபட்டார்.

அத்துடன் பிரதம அதிதிகள் புத்தகத்தில் இராணுவத் தளபதியவர்களின் கையொப்பமும் இடப்பட்டது.

இதன் போது மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் போன்றோர் கலந்து கொண்டார்.

best Running shoes brand | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK