Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th August 2017 16:44:03 Hours

புதிய பதவி நிலைப் பிரதானியவர்களுக்கு இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது

இலங்கை இராணுவத்தின் இலேசாயுத காலாட்படையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்கள் புதிய பதவி நிலைப் பிரதானியாக பதவியேற்றதன் நிமித்தம் பனாகொடையில் உள்ள படைத் தலைமையகத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கும் நிகழ்வு வியாழக் கிழமை (10) இடம் பெற்றது.

மேலும் புதிய பதவி நிலைப் பிரதானியவர்களை இலேசாயுத காலாட்படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியவர்கள் வரவேற்றதோடு இராணுவ கண்டுள ஹத்திய எனும் யானையின் தலைமையில் அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகள் மிக விமரிசையாக படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வின் இறுதியில் இராணுவ இலேசாயுத காலாட்படையின் உயிர்நீத்த இராணுவ வீரரகளின் நினைவுத் துாபிக்கு அஞ்சலி செலுத்தியதுடன் படையினருடனான விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.

jordan Sneakers | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News