Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th December 2017 11:00:06 Hours

புதிய தொண்டர்ப் படைத் தளபதி பதவியேற்பு

மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்கள் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணித் தளபதியாக இன்று காலை (6) கொஸ்கமவிலுள்ள தொண்டர் படையணித் தலைமையகத்தில் (SLAVF) பதவியேற்றார்.

இவ்வாறு வருகை தந்த புதிய தொண்டர்ப் படைத் தளபதியவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

அந்த வகையில் பிரித் சமய வழிபாடுகளைத் தொடர்ந்து புதிய தொண்டர்ப் படைத் தளபதியவர்கால் இப் படைத் தலைமையக வளாகத்தில் மரநடுகையும் இடம் பெற்றது.

மேலும் இத் தொண்டர்ப் படைத் தலைமையக தளபதியவர்களால் தமது கடமைப் பொறுப்பை கையொப்பமிட்டு ஏற்றதுடன் இப் படையணியின் அதிகாரிகள் மற்றும் படையினருடனான கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்கள் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியில் 35ஆவது தொண்டர்ப் படைத் தளபதியாக பதவியேற்றுள்ளதுடன் 135 வருட காலனித்துவ காலங்கள் முதல் காணப்படுகின்றது.

இந் நிகழ்வில் திருமதி ருவினி சுஜிவா விக்கிரமரத்தின அம்மனியூம் கலந்து கொண்டார்.

புதிய தொண்டர்ப் படைத் தளபதியவர்களைப் பற்றிய விபரங்கள் பின்வருமாறு

மேஜர் ஜெனரல் அகம்போடி பியல் டி சொய்சா விக்கிரமரத்தின ஆர் டபிள்யூ பி என்டீயூ பிஎஸ்சி அவர்கள் 1963ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி பிறந்துள்ளார். இவர் இலங்கை இராணுவத்தில் 1983ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் திகதி இணைந்து தியத்தலாவையிலுள்ள இலங்கை இராணுவ அக்கடமியில் இராணுவ அடிப்படை பயிற்ச்சிகளை நிறைவூ செய்தார். இவர் 1985ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதியன்று இலங்கை இராணுவ சிங்கப் படையணியில் இணைக்கப்பட்டு செக்கன்ட் லெப்டினனாக சேவையாற்றினார்.

மேஜர் ஜெனரல் விக்கிரமரத்தின அவர்கள் தமது கல்வியை காலி ரிச்மண்ட் கல்லுhரியில் மேற்கொண்டார். இவர் விளையாட்டு மற்றும் நீச்சல் போட்டிகளில் தேசிய ரீதியில் சிறந்த வீரராக காணப்படுகின்றார். இவர் 1982ஆம் ஆண்டு இடம் பெற்ற தேசிய பென்டத்தலான் நீச்சல் போட்டியில் சிறந்த வீரராகத் திகழ்ந்துள்ளார். 1998ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினால் இடம் பெற்ற இராணுவ கட்டளைகள் தொடர்பான பாடநெறியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் 2013ஆம் ஆண்டு சீனாவிலுள்ள தேசிய பாதுகாப்பு கல்லுhரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர் தமது இராணுவச் சேவையில் பாரிய அளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியிலான கருத்தரங்குகள் மற்றும் சட்டரீதியிலான சமாதான நடவடிக்கைப் பணிகளில் பங்கேற்று பல அனுபவங்களைப் பெற்றவராகக் காணப்படுகின்றார். மேஜர் ஜெனரல் விக்கிரமரத்தின அவர்கள் அமெரிக்கப் படையினரால் இலங்கையில் இடம் பெற்ற ஆபத்தல்லாத ஆயுதக் கருத்தரங்கில் இவர் கலந்து கொண்டார். அமெரிக்;க கடற் படையினரால் இலங்கை மற்றும் பங்களாதேசில் இடம் பெற்ற இராணுவ தந்திரோபாய போர் உருவகப்படுத்தல் பயிற்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் இவர் 2004ஆம் ஆண்டு அமெரிக்க கடற் படையினரால் இலங்கையில் இடம் பெற்ற இராணுவ தந்திரோபாய போர் உருவகப்படுத்தல் பயிற்ச்சியில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக செயலாற்ற இவர் தெரிவூ செய்யப்பட்டார். அந்த வகையில் இவர் ஐக்கிய அமெரிக்காவில் 2005ஆம் ஆண்டு விர்ஜினியா நொர்ப்புலொக்கில் இடம் பெற்ற கூட்டுப் படைக் கல்லுhரியிலும் பயிற்ச்சிகளைப் பெற்றுள்ளார். மேலும் இவர் பாகிஸ்தானில் இடம் பெற்ற விமானப் பறத்தல் தொடர்பான பயிற்ச்சியையூம் பயின்றுள்ளார்.

மேஜர் ஜெனரல் விக்கிரமரத்தின அவர்கள் இராணுவத்தில் சிறந்த விளையாட்டு வீரராகத் திகழ்ந்துள்ளதுடன் தலைமையங்களில் நீச்சல் போட்டிகளிலும் சிறந்து விளங்கியுள்ளார்.

மேஜர் ஜெனரல் விக்கிரமரத்தின அவர்கள் தமது இராணுவச் சேவையில் இலங்கையில் வட கிழக்கு மாகாண நடவடிக்கைப் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் காலாட் படையனித் தலைமையகங்களில் புலனாய்வு அதிகாரி , நிறைவேற்று அதிகாரி , உப கட்டளை அதிகாரி மற்றும் கட்டளை அதிகாரி போன்ற பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இலங்கையின் யுத்த நடவடிக்கைகளின் போது ஏயார் மொபைல் தலைமைய கட்டளை அதிகாரியாக செயற்பட்டு பல அனுபவங்களைப் பெற்றுள்ளார். அத்துடன் இலங்கையில் கடந்த 30ஆண்டு காலமாக இடம் பெற்ற யூத்தத்தின் போது நடவடிக்கைள் கட்டளை அதிகாரியான மற்றும் வெளிக்கள அதிகாரியாகவும் இவர் சேவையாற்றியூள்ளார். மேஜர் ஜெனரல் விக்கிரமரத்தின அவர்கள் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23ஆவது படைப் பிரிவின் 231ஆவது படைப் பிரிவில் கட்டளை அதிகாரியாக ஏப்ரல் மாதம் 2005 முதல் பெப்ரவரி மாதம் 2006 வரை நடவடிக்கைகள் அதிகாரியாவும் செயற்பட்டுள்ளார். இவர் 2007ஆம் ஆண்டு டிசெம்பர முதல் 2008 ஆகஸ்ட் வரை வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளை வெற்றிகரமாக ஈடுபட்டு போது 53ஆவது படைப் பிரிவின் பிரதி கட்டளை அதிகாரியாக செயற்பட்டுள்ளதுடன் 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் 2009ஆம் ஆண்டு யூலை மாதம் வரை 61ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார். இவர் இயந்திரவியல் காலட் படைப் பிரிவில் குறுகில காலப் பிரிவில் 2008ஆம் ஆண்டு மே மாதம் முதல் யூலை மாதம் வரை கட்டளை அதிகாரியாகவூம் காணப்பட்டார். இவர் யாழ்பாணத்தின் 51ஆவது படைப் பரிவில் 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட வரை கட்டளை அதிகாரியாக செயற்பட்டதுடன் திருகோணமலையின் 22ஆவது படைப் பரிவில் கட்டளை அதிகாரியாக 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட மாதம் முதல் 2014ஆம் ஆண்டு மே மாதம் வரை கடமையாற்றியுள்ளார். மேஜர் ஜெனரல் விக்கிரமரத்தின அவர்கள் கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கீழ் இயங்கும் பூநேரியன் பிரதேச 66ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக மே மாதம் 2014ஆம் ஆண்டு சேவையாற்றியுள்ளதுடன் இவர் இராணுவப் படைத் தலைமையத்தில் இராணுவப் பொது நிறுவாகப் பிரதானியாக 2016ஆம் ஆண்டு நடுப் பகுதியில் சேவையாற்றியுள்ளார். அத்துடன் இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியில் கேர்ணல் கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் விக்கிரமரத்தின அவர்கள் தமது சேவையின் பலனாக எதிரிகளைத் தோற்கடித்தமைக்காக ரணவிக்கிர பதக்கத்தையூம் வென்றுள்ளார்.

மேஜர் ஜெனரல் விக்கிரமரத்தின அவர்கள் போர்ப் பயிற்ச்சிகள் மையத்தில் பயிற்றுவிப்பாளராகக் காணப்பட்டதுடன் இவர் நடடிக்கைகளின் போது படைப் பிரிவின் மேஜர் , கேர்ணல் நிறுவாகப் பிரதானி மற்றும் பல படைத் தலைமையகங்களில் கட்டளை மற்றும் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு பல அனுபவங்களைப் பெற்றுள்ளார். இவர் கூட்டு நடவடிக்கைகத் தலைமையகங்களில் கேர்ணல் பிரதானியாகச் செயற்பட்டதுடன் சுனாமி போன்ற அனர்த்த நடவடிக்கைகளின் போது வெளிநாட்டு , அரச / மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபத்தையும் பெற்றுள்ளார். மேஜர் ஜெனரல் விக்கிரமரத்தின அவர்கள் வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பெர்ரவரி 2010 முதல் ஆகஜ்ட் 2011 வரை கட்டளை அதிகாரியாக செயற்பட்டுள்ளதுடன் மிக இக்கட்டான போர் சூழ்நிலைகளின் போது எல் ரீ ரீ ஈ யினரின் இடம் பெயர்ந்த , புனர்வாழ்வு மற்றும் குடியமர்வு ஒருங்கிணைப்பு நல்லிணக்கம் போன்றவற்றை நிர்வகிக்கும் அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார். இவர் இராணுவ கட்டளை அதிகாரியாக பாதுகாப்பு சேவைக் கல்லுாரியில் 2006 பெப்ரவரி முதல் 2007 டிசெம்பர் வரை செயற்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் விக்கிரமரத்தின அவர்களின் பாரியாராக ருவினி சுஜிவா விக்கிரமரத்தின அவர்கள் காணப்படுவதுடன் ஒரு பெண் பிள்ளை மற்றும் இரு ஆண் பிள்ளைகளின் தந்தையாகவும் இவர் காணப்படுகின்றார்.

இவர் 09ஆவது இலங்கை இராணுவ சிங்கப் படையணித் தலைமையக கேர்ணல் ஆகவும் சேவையாற்றியுள்ளார்.

Adidas shoes | Air Jordan Release Dates 2020