Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th September 2017 08:33:16 Hours

பிரிட்டனில் நடைபெற்ற 18ஆவது பரிசூட் போட்டியில் இலங்கை இராணுவம் பங்கேற்பு

பிரித்தானிய பரிசூட் சங்கத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்தப் போட்டியில் இலங்கை இராணுவத்தினர் கலந்து கொண்டு மூன்று தங்கப் பதக்கங்களை பெற்றுக் கொண்டு சிறப்பான திறமையையும் வெளிக்காட்டினார்கள். இந்தப் போட்டிகள் ஓகஸ்ட் மாதம 14ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை நடைபெற்றது.

இந்த பரிசூட் போட்டிகளுக்கு பிரித்தானிய பாதுகாப்பு படைவீரர்கள் ,சர்வதேச இராணுவ குழுக்கள் மற்றும் சிவிலியன்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் பங்கு பற்றுவதற்காக இங்கிலாந்து இராணுவ பரிசூட் அணி,ரோயல் கடற்படை மற்றும் விமானப்படையினர்,அமெரிக்க இராணுவத்தின் கோல்டன் நைட்ஸ் மற்றும் இலங்கை இராணுவத்தினர் பங்கேற்றனர்.

இலங்கை இராணுவத்தின் கமாண்டோ மற்றும் விஷேட படையணியைச் சேர்ந்த 4 அதிகாரிகளும் 4 படை வீரர்களும் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் ஆகாய திறந்த வெளிப்பரப்பிலிருந்து சுழற்சி முறையில் இருந்து இந்த பரிசூட் போட்டியில் பங்கு பற்றி தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.

இலங்கை இராணுவத்திலிருந்து இந்த போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் மற்றும் திறமைகளை வெளிக்காட்டிய.

இராணுவத்தினரது விபரங்கள் கீழ்வருமாறு:

லெப்டினன்ட் கேர்ணல் வி.எம்.என் ஹெட்டியாரச்சி (கமாண்டோ)

மேஜர் யூ. ஏ. திலகசிரி (விஷேட படையணி)

மேஜர ஆர்.எச்.ஜே.பி வர்ணபுர (விஷேட படையணி)

பதவிநிலைச் சாஜன்ட் டப்ள்யூ.ஏ அணில் (விஷேட படையணி)

சாஜன்ட் ஆர்.டீ.பி குணவர்தன (விஷேட படையணி)

கோப்ரல் ஏ.கே பஸ்நாயக (கமாண்டோ)

விங்சூட் போட்டியல் கலந்து கொண்டவர்கள்

லெப்டினன்ட் கேர்ணல் எஸ்.பி விக்ரமசேகர (கமாண்டோ)

ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 11 கே.பி.என. தம்மிக (கமாண்டோ)

கெனபி வடிவத்தில் - இரண்டு முறை சுழற்சிபோட்டியல் கலந்து கொண்டவர்கள்

லெப்டினன்ட் கேர்ணல் எஸ்.பி விக்ரமசேகர (கமாண்டோ)

கோப்ரல் ஏ.கே பஸ்நாயக (கமாண்டோ)

லெப்டினன்ட் கேர்ணல் வி.எம்.என் ஹெட்டியாரச்சி (கமாண்டோ)

latest jordan Sneakers | New Balance 991 Footwear