Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th April 2018 16:09:08 Hours

பாதுகாப்பு அமைச்சினால் பொதுநலவாயா விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றி சாதனையாளர்களுக்கு பாராட்டுக்கள்

சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்த பொதுநலவாய -2018 க்கான விளையாட்டு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இப் போட்டியில் போட்டியிட்டு வெற்றிப் பொற்ற முப்படை வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு (27) ஆம் திகதி வெள்ளிக் கிழமை பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் பாராட்டு விழா நடாத்தப்பட்டது.

இந் நிகழ்விற்கு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதான அதிதியாக கலந்து கொண்டதோடு பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் அரசாங்க குடியரசு செயலாளர்கள் பாதுகாப்பு பிரதான பதவி நிலை அதிகாரி மற்றும் கடற்; படைத் மற்றும் இராணுவ பதவி நிலை பிரதாணி உட்பட சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

அதேபோல் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கொமாண்டோ படையணியின் சாஜன் ஜே.பி.சீ லக்மால் பொறியியளாலர் சேவை படையணியின் லார்ஸ்ட் கோப்ரல் இஷான் பண்டார இலங்கை கடற்படை மற்றும் விமானப் படையை பிரதிநிதித்துவப்படுத்தி கடற்படையின் ஐ.சி. டி. திசாநாயக மற்றும் விமானப்படையின் பி.டி.எச் ஹோமஸ் போன்ற வீரர்களுக்கு விஷேட நினைவு சின்னமும்; சான்றிதல்களும் வழங்கப்பட்டதுடன் கௌரவ அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் இராணுவம் கடற்படை மற்றும் விமானப் படைகளின் வெற்றி பெறுவதற்கான அவர்களின் திறமயையும் பாராட்டினர்.

இந்த பாராட்டு விழாவில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் பல விளையாட்டு போட்டிகளை பிரதிநிதித்துவப் படுத்திய இராணுவ வீர வீராங்கனைகள் கலந்து கொண்டதோடு பரிசுகள் வழங்க கௌரவ பாதுகாப்பு அமைச்சர் உட்பட் மற்றும் அரசாங்க குடியரசு செயலாளர்கள் பாதுகாப்பு பிரதான பதவி நிலை அதிகாரி மற்றும் கடற் படைத் மற்றும் இராணுவ பதவி நிலை பிரதாணி உட்பட சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

அதேபோல் 56 கிலோ எடையின் கீழ் ஆண்களுக்கான போட்டியில் 248 கிலோ பளுதூக்கி இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இராணுவ விளையாட்டு கழகத்தின் கோப்ரல் ஜே.ஏ.சி. லக்மால் அவர்கள் வென்கலப் பதக்கத்தை பெற்றுக் வெற்றிப் பெற்றார்.அதன் படி அவரால் 114 கிலோ மற்றும் 134 கிலோ பளுதூக்கி "தூய்மையான மற்றும் சுறுசுறுப்பான" என்ற முறையில் தனது திறமையை மேம்படுத்த முடிந்தது.

பொறியியளாலர் சேவை படையணியின் லார்ஸ்ட் கோப்ரல் இஷான் பண்டார அவர்கள் இராணுவத்திட்கும் தமது நாட்டிற்கும் கௌரவத்தை பெற்றுக் கொடுத்துள்ளதுடன் அவுஸ்ரேலியா கோல்ட் கோஸ்ட் நகரில் இடம் பெற்ற பொதுநலவாய -2018 க்கான விளையாட்டு போட்டியில் 52 எடையின் கீழ் நடைப் பெற்ற குத்துச்சண்டை இறுதி சுற்றுப் போட்டியில் வெற்றிப் பெற்று வென்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டதுடன் போட்டி இறுதியில் இந்தியா விளையாட்டு வீரருடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற திறமையான வீரராவார்.

இப் பொதுநலவாய 2018 க்கான விளையாட்டுப் போட்டியானது கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதோடு 11 வருடங்களாக இடம் பெற்ற இப் போட்டியில் உலகத்தில் 71 ஆண்டுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 6,600 க்கும் அதிகமான விளையாட்டு வீர வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகளும் பங்கு பற்றினர்.

spy offers | Asics Onitsuka Tiger