Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th April 2018 17:17:36 Hours

பாகிஸ்தான் இராணுவ பிரதானியை இலங்கை இராணுவ தளபதி சந்திப்பு

இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் பாகிஸ்தானில் அமைந்துள்ள ரவல்பின்டி இராணுவ தலைமையகத்தில் பாகிஸ்தான் இராணுவ பிரதானியான ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா அவர்களை (23) ஆம் திகதி திங்கட் கிழமை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இலங்கை இராணுவ தளபதிக்கு பாகிஸ்தான் இராணுவ பொது தலைமையக நுழைவாயிலில் வைத்து இராணுவ சம்பிரதாய முறைப்படி பாகிஸ்தான் இராணுவத்தினர் கௌரவ அணிவகுப்பு மரியாதைகளை வழங்கினர்.

மேலும் பாகிஸ்தான் இராணுவ தலைமையகத்தில் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிகளுக்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் சென்று மலரஞ்சலிகளை செலுத்தி கௌரவம் செலுத்தினர்.

பின்பு இலங்கை இராணுவ தளபதி பாகிஸ்தான் இராணுவ மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். அதன் பின்பு பாகிஸ்தான் இராணுவ தளபதியின் பணிமனைக்கு சென்று இலங்கை இராணுவ தளபதி பாகிஸ்தான் இராணுவ தளபதியை சந்தித்தார்.

பின்பு இரு நாட்டு இராணுவ தளபதிகளுக்கிடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பரஸ்பர புரிதல் , பல்வேறு பயிற்சிகள் , கல்வித் திட்டங்களில் பங்கேற்று ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல், இலங்கைக்கு பாகிஸ்தான் இராணுவம் விரிவாக்கப்பட்ட பங்களிப்பு, இராணுவ வழிகாட்டல்கள் மற்றும் பல்வேறு படிப்புகள், உத்தியோகத்தர்களின் வாழ்க்கை முன்னேற்றம் மற்றும் புதிய பாடத்திட்டங்களின் தொகுதிகள் வேகமாக மாறிவரும் பாதுகாப்பு காட்சிகளைச் சந்தித்தல், சமாதான ஆதரவு செயற்பாடுகள் பயிற்சி இலங்கை (IPSOTSL) இன்ஸ்டிட்யூட் இன் உள்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்கான உள்ளீடுகள். பாகிஸ்தான் இராணுவ தளபதிகள் இலங்கைக்கான விஜயம் தொடர்பாக கலந்துரையாடினர்.

மேலும் இரு தளபதிகளும் உலக பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் சமாதான வாய்ப்புக்களை மேலும் முன்னேற்றம் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய அபிவிருத்திகள் பதற்றம் வலுப்படுத்தும் மற்றும் தடுக்க வேண்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், கருத்துக்களையும் இந்த சந்திப்பின் போது பேசிக்கொண்டனர்.

இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் இந்த சந்திப்பு தொடர்பாக நன்றியை தெரிவித்து பின்பு விருந்தோம்பல் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் இலங்கை இராணுவ தளபதி , சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக, பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி பிரிகேடியர் ஹேமந்த பண்டார மற்றும் இராணுவ தளபதியின் செயலாளர் கேர்ணல் உதய குமார அவர்கள் இணைந்திருந்தனர்.

Sportswear free shipping | Air Jordan Sneakers