Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th December 2018 08:01:21 Hours

பாகிஸ்தான் இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தான் இராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் சிராக் ஹெய்டர் இலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை (11) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மேற்கொண்டார்.

இவரது வருகையின்போது கொழும்பு பண்டாரநாயக விமான நிலையத்தில் வைத்து இவரை இலங்கை இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை பிரதிநிதித்துவ படுத்தி இராணுவ பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் என்.ஆர் லமாஹேவா அவர்கள் வரவேற்றார்.

இந்த உத்தியோகபூர்வ வருகையின் போது இந்த மேஜர் ஜெனரல் அதிகாரியின் பாரியார் திருமதி உமீ பர்வாஹ், கேர்ணல் அரீப் பங்காஷ் மற்றும் மேஜர் ஜேன் பட்ஷாஜ் போன்றோரும் வருகை தந்தனர். மேலும் வருகை தந்த இந்த உயரதிகாரி பட்டலந்த பாதுகாப்பு சேவை மற்றும் பதவி நிலை கல்லூரியில் இடம்பெற்ற பட்டமளிப்பு நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அதனை தொடர்ந்து இராணுவ பொது நிர்வாவ பிரதானி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது பங்களிப்புடன் பாகிஸ்தான் உயரதிகாரிக்கு சம்பிரதாய நிகழ்ச்சி ஒன்று கொழும்பு ரொக்கவுஷ் இராணுவ முகாமில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மேலும் தியதலாவையில் உள்ள ஸ்னயிபர் கல்லூரி நிகழ்விலும், எதிர்வரும் தினங்களில் தியதலாவை கெடற் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழாவிலும் கடந்து கொள்வதற்கு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.latest Running Sneakers | nike fashion