Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th January 2018 16:48:36 Hours

பாகிஸ்தான் இராணுவ பதவி நிலைப் பிரதானியவர்கள் இலங்கை விஜயம்

இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் இராணுவ பதவி நிலைப் பிரதானியான ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா அவர்கள் நல்லிணக்கம் புரிந்துணர்வு மற்றும் இராணுவ ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கான விஜயத்தை (15) திங்கட் கிழமை மாலை வேளை மேற்கொண்டார்.

அந்த வகையில் ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா அவர்களின் மூன்று நாள் விஜயத்தில் மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இமதிப்பிற்குறிய பிரதம அமைச்சர் , பாதுகாப்பு அமைச்சர்கள் பாதுகாப்பு அமைச்சின் பதவி நிலைப் பிரதானிகள் , கடற் படை மற்றும் விமானப் படைத் தளபதிகளை சந்திக்க தீர்மானித்துள்ளார்.

இவ் விஜயத்தில் ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா , திருமதி அயேஷா அம்ஜத் பேகம் , ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா அவர்களின் பாதுகாப்பு செயலாளரான இப்தார்க் ஹசன் சவூத்திரி , பேகம் அவர்களின் பாதுகாப்பு செயலாளரான திருமதி சிஸா இப்தார்க் மற்றும் ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா அவர்களின் பாதுகாப்பு செயலாளர்களான லெப்டினன்ட் கேர்ணல் அசிப் ஹஸ்மட் மற்றும் கெப்டன் ஹசன் சாஹீட் போன்றௌர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு இலங்கை சர்வதேச பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த பாகிஸ்தான் இராணுவ பதவி நிலைப் பிரதானியான ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா மற்றும் திருமதி அயேஷா அம்ஜத் பேகம் உள்ளடங்களான குழுவினரை இராணுவத் தளபதியான லெப்டினன்ட ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றம் திருமதி சந்திரிக்கா சேனாநாயக்க சேவா வணிதாவின் தலைவி அவர்களும் அன்போடு வரவேற்றனர்.

அந்த வகையில் செவ்வாயக் கிழமையன்று (16) அதிகார பூர்வமாக இராணுவத் தளபதியவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்திக்கவுள்ள ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா அவர்களுக்கு இராணுவத் தலைமையகத்தினால் இராணுவ அணிவகுப்பு மரியாதையூம் நிகழ்வூகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் சேவா வணிதா அமைப்பினால் விசேட வரவேற்பு நிகழ்வும் திருமதி பேகம் பாரிஹா ராஹீல் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இராணுப் பதவிநிலைப் பிரதானியவர்களின் விபரக் கோவை பின்வருமாறு

ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா நிஷான் ஐ இம்டியாஸ் அவர்கள் (இராணுவம்) அவர்கள் கராச்சி மானிலத்தில் 1960ஆம் வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி பிறந்தார். இவர் பலோச் (காலாட்) படைத் தலைமையகத்தில் கெமிஷன் அதிகாரியாக 1980ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி இணைந்தார். மேலும் ஜெனரல் அவர்கள் கணேடிய படையணி மற்றும் டொரொண்டோ கட்டளை மற்றும் ஸ்டாப் கல்லுாரியில் கற்கை நெறியைப் பயின்றதுடன் இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் போர் தொடர்பான உயர் பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார். இவர் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் தகமைக் கற்கை நெறிகளை பயின்றுள்ளதுடன் ஐக்கிய அமெரிக்காவின் மொண்டெரி (கலிபோனியா) பிரதேச நவல் முதுகலைப் பல்கலைக்கழகத்தில் உயர் அதிகாரிகளுக்கான பாதுகாப்பு மேலானண்மை முதுகலைப் பட்டப்படிப்பையூம் நிறைவு செய்துள்ளார். அத்துடன் ஜெனரல் அவர்கள் காலாட் படையணிப் படைப் பிரிவுகளில் கட்டளை அதிகாரியாக காணப்பட்டதுடன் வடக்கு பிரதேசத்தின் கட்டளைத் தளபதியாகவும் 10 படையணிகள் காலாட் மற்றும் தந்திரோபாய பயிற்றுவிப்பு மையங்களிலும் கட்டளை அதிகாரியாக சேவையாற்றியுள்ளார்.

அந்த வகையில் ஜெனரல் பாஜ்வா அவர்கள் இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் , காலாட் மற்றும் தந்திரோபாய பயிற்றுவிப்பு மையங்களிலும் மற்றும் கட்டளை மற்றும் ஸ்டாப் கல்லுாரியிலும் சிறந்த அனுபவத்தைப் பெற்றவராகக் காணப்படுகின்றார். மேலும் அவர் காலாட் படையணித் தலைமையக மேஜராகவும் ஜெனரல் பதவிநிலைப் பிரதானியாக 1( திட்டமிடல்) மற்றும் பதவி நிலைப் பிரதானி படையணியிலும் சேவையாற்றியுள்ளார்.

அந்த வகையில் இவர் சவூதி அரேபியாவின் துாதுக் குழுவினராக மூன்று வருட காலமாக சேவையாற்றியதுடன் இவர் கொங்கோ நாட்டின் ஐக்கிய நாடுகளின் சமாதான நடவடிக்கைப் பணிகளில் பாகிஸ்தான் இராணுவ படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாகவூம் சேவையாற்றியுள்ளார். இவர் பாகிஸ்தான் இராணுவத்தின் கடமைப் பொறுப்பேற்க முன்னர் பயிற்ச்சிகள் மற்றும் மேற்பார்வை ஜெனரலாக பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பயிற்றுவிப்பு திட்டமிடல் அதிகாரியாகவூம் சேவையாற்றியுள்ளார். அத்தோடு இவர் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதியன்று பாகிஸ்தான் இராணுவப் பதவிநிலைப் பிரதானியாக கடமைப் பொறுப்பேற்றார்.

அந்த வகையில் ஜெனரல் அவர்கள் இராணுவ இணைப்புடன் தொடர்புபட்ட இராணுவ குடுபத்திலிருந்து இராணுவத்திற்கு வந்தவராவார். இவர் தமது பாடசாலைக் கல்வியை ராவல்பின்டிக் கல்லுாரியில் மேற்கொண்டுள்ளார். மேலும் இவர் திருமணமாகிய இரு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். இவரது பொழுது போக்காக வாசித்தல் , கொல் விளையாடுதல் , வேட்டையாடுதல் மற்றும் நீச்சல் போன்றன காணப்படுகின்றது. இவர் நாடு முழுவதும் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டுள்ளதுட்ன கலாச்சார நிகழ்வுகளிலும் சிறந்து காணப்படுகின்றார்.

buy footwear | NIKE HOMME