Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th January 2018 18:33:36 Hours

பாகிஸ்தான் இராணுவ தளபதி பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் அவர்களை சந்திப்பு

பாகிஸ்தான் இராணுவ தளபதியான ஜெனரல் கமார் ஜாவட் பஜ்வா அவர்கள் இலங்கையின் பிரதமரான ரணில் விக்ரமசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கபில வைத்தியரத்ன அவர்களை (17) ஆம் திகதி புதன் கிழமை சந்தித்தார்.

இவர்கள் இருவரை சந்தித்தபோது பாகிஸ்தான் இராணுவ தளபதி இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாகவும், தெற்காசிய பிராந்தியத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, அதன் வளர்ச்சி பொருளாதாரம் தொடர்பாகவும் கலந்துரையாடினார்கள்.

பாகிஸ்தான் இராணுவ தளபதி பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தனது கௌரவத்தை வெளிப்படுத்தினார் பின்பு பிரதமரினால் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக அவர்களை இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஷாஹித் அஹ்மட் ஹஷ்மட், இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, பாகிஸ்தான் இராணுவ உயரதிகாரி பிரிகேடியர் இப்டிகார் ஹசன் சேவகாதரி, மற்றும் பாக்கிஸ்தானின் உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகரானகேணல் சஜ்ஜத் அலிபோன்ற உயரதிகாரிகள் சந்தித்தனர்.

மேலும், வருகை தந்தபாக்கிஸ்தான் இராணுவ தளபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன அவர்களையும் சந்தித்தார்.

இவர்கள் இருவரிடையே பாதுகாப்பு விபரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு இறுதியில் பாதுகாப்பு செயலாளரினால் பாகிஸ்தான் இராணுவ தளபதிக்கு நினைவு சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பாக்கிஸ்தான் உயர் ஆணையாளர், டாக்டர் ஷாஹித் அஹ்மட் ஹஷ்மத் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ ஒருங்கினைப்பு அதிகாரிமேஜர் ஜெனரல் டீ.ஏ.ஆர் ரணவக, பாகிஸ்தான் இராணுவ உயரதிகாரிகளான பிரிகேடியர் இப்திகார் ஹசன் சௌஹதாரி, மற்றும் பாக்கிஸ்தானின் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சஜ்ஜத் அலி, அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

Best Nike Sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp