Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th June 2018 16:15:57 Hours

பாகிஸ்தானிய கூட்டுத் படைகளின் பிரதானி இலங்கை விஜயம்

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்ட பாகிஸ்தானிய கூட்டுத் படைகளின் பிரதானி ஜெனரல் சுபாய்ர் மஹ்மூத் ஹயட் என்ஐ (எம்) (General Zubair Mahmood Hayat, NI (M) அவர்கள் (27) ஆம் திகதி புதன் கிழமை பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அத்மிரால் ரவிந்தர சீ விஜேகுனவர்தன மற்றும் இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களால் வரவேற்கப்பட்டனர்.

ஜெனரல் சுபாய்ர் மஹ்மூத் ஹயத் அவர்கள் பகித்தானிய 17 ஆவது கூட்டுத் படைகளின் பிரதானிகள் ஆவார். பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அத்மிரால் ரவிந்தர சீ விஜேகுனவர்தன அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தானிய கூட்டுத் படைகளின் பிரதானி அவர்கள் இந்த விஜயத்தின் நிமித்தம் கௌரவ ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, முப்படை தளபதிகள் மற்றும் இராணுவ பிரதானிகளையும் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, சிறப்பு பயிற்சி மற்றும் போர் பயிற்சிகள் உள்ளிட்ட பல விடயங்களை இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் கலந்துறையாடவுள்ளனர்.

இநத விஜயத்தின் போது ஜெனரல் சுபாய்ர் மஹ்மூத் ஹயத் அவர்கள் ஸ்ரீ ஜயவர்தன புரயில் அமைந்திருக்கும் தேசிய இராணுவ நினைவு துாபிக்கு மலர் அஞ்சலி செலுத்துவதற்கும், சபுகஸ்கந்த பாதுகாப்பு கட்டளை மற்றும் பிரதானி வித்தியாலயத்தில் விசேட விரிவுரையில் கலந்து கொள்வதுடன், உத்தியோகபூர்வமாக பாகிஸ்தானிய அரசாங்கத்தால் 06 குதிரைகள் இலங்கை விமானப்படைக்கு ஒப்படைக்கப்படவுள்ளனர்.

ஜெனரல் சுபாய்ர் மஹ்முத் ஹயத் அவர்கள் ஒரு இராணுவ குடும்ப பின்னணியுடன் 1976 ல் பாகிஸ்தானிய இராணுவத்தில் சேர்ந்தார். அவர் இதுவரை காலத்திலும் பல கட்டளை அதிகாரியாகவும் பதவி நிலை பிரதானியாகவும் நியமனங்கள் பெற்றுள்ளார். ஐக்கிய அமெரிக்கா போட் சில் ஒக்லாஹோமா (Fort Sill Oklahoma), ஐக்கிய ராஜதானியில் கெம்பர்லின் கட்டளை மற்றும் பதவி நிலை வித்தியாலயம் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பட்டதாரியும் Master Gunner, Master War Fighter விருதுகள் பெற்றுள்ளார்.

ஜெனரல் ஹயத் தற்போது பதவியின் நிமித்தம் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பதவி உயர்வுக்கு பின் பகிஸ்தான் குடியரசில் 17 ஆவது கூட்டுத் படைகளின் பிரதானியாக 4 நட்சத்திரங்களுடன் மூத்த இராணுவ அதிகாரியாவர்.

இந் நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஆணையாளர் ஷஹீட் அஹ்மட் ஹாஷெம்ட் அவர்களும் பங்கேற்றார்.

Running sport media | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp