Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th May 2018 18:38:10 Hours

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியினரால் சிறப்பு பாடநெறி

மிகவும் அங்கிகாரம் பெற்ற பயிற்சி நிலையமாக ஏற்கப்பட்ட பனா கொடையில் அமைந்திருக்கும் இலங்கை இராணுவ சமிக்ஞை படைத் தலைமையகத்தினரால் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு உயர் பட்டப்படிப்பு 'நவீன சமூக பண்பாடு மற்றும் தனிப்பட்ட சீர்த்திருத்தம் (Modern Social Etiquette & Individual Grooming) சம்பந்தமான சிறப்பு பாடநெறி வழங்கப்பட்டது.

ஆதன்படி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மேலாண்மை வர்த்தக மற்றும் வர்த்தகத் துறை ஆய்வு சம்பந்தமாக (சிறப்பு) உயர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் (26) ஆம் திகதி சனிக்கிழமை இந்த பாட நெறியில் கலந்துகொண்டார்கள்.

இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் கோரிக்கைக்கு அமைய இலங்கை இராணுவ சமிக்ஞை படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் விஜய சிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த ஒரு நாள் திட்டத்திற்கு தேவையான வசதிகளுடன் வழங்கப்பட்டது.

affiliate tracking url | Autres