Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th November 2018 12:56:53 Hours

பங்களாதேசின் இராணுவ சிரேஷ்ட கொமிஷன் அற்ற அதிகாரிகள் இலங்கை விஜயம்

பங்களாதேசின் இராணுவ சிரேஷ்ட கொமிஷன் அற்ற அதிகாரி குழுவினர்கள் இலங்கை இராணுவ சிரேஷ்ட கொமிஷன் அற்ற அதிகாரிகளை சந்தித்தனர். அதன் நிமித்தம் தெற்காசியாவின் தொலை தொடர்பு தொடர்பான கலந்துரையாடலை மேற் கொள்ளவதற்காக கடந்த (11) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இலங்கைக்கு வருகை தந்தனர்.

பங்களாதேசின் இராணுவ சிரேஷ்ட கொமிஷன் அற்ற அதிகாரி குழுவினர்களின் தலைமை அதிகாரிகள் இருவர் (12) ஆம் திகதி திங்கட் கிழமையன்று இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று ஜெனரல் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்து தெற்காசியாவின் தொலை தொடர்பு முக்கியத்தும் மற்றும் அதன் அறிவை மேம்படுத்தும் முக்கியத்துவம் பற்றியும் கலந்துரையடல்களை மேற்கொண்டனர்.

இத் கலந்துரையாடலானது திட்டமானது இராணுவ தளபதி லெப்டினென்ட ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் எண்ணக்கருவிற்கமைய பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஆசிர்வாதத்துடன் அண்ணிய நாட்டுடன் இலங்கை இராணுவத்தின் யுத்த அனுபவம் மற்றும் அறிவை மேம்படுத்தி கொள்வதற்காக இத் திட்டம் ஓழுங்கமைக்கப்பட்டது.

பங்களாதேஷின் இராணுவ சிரேஷ்ட கொமிஷன் அற்ற அதிகாரி குழுவினர்கள் இலங்கைக்கு வருகை தந்த வேளை இலங்கை இராணுவ படையணி சாஜன்ட் மேஜர் அவர்களுடன் இணைந்து தொலை தொடர்பு முக்கியத்தும் தொடர்பாக கனேமுல்லை கொமாண்டொ படையணி தலைமையகம், அதேபோல் அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சிங்க படையணி தலைமையகத்திலும், பல்லேகெலயில் அமைந்திருக்கும் 1ஆவது ரைபல் படையணி, மின்னேரிய பிரங்கி இராணுவ பயிற்ச்சி முகாம் மற்றும் காலாட் படை பயிற்ச்சி முகாம், தியதலாவ இலங்கை இராணுவ பயிற்ச்சி முகாம் மற்றும் தியதலாவ பயிற்ச்சி மற்றும் ஸனைப்பர் பயிற்ச்சி முகாம் ஆகியவற்றிக்கும் தனது விஜயத்தை மேற்கொண்டனர்.

இலங்கை இராணுவத்தினரின் தொலை தொடர்பு முக்கியத்தும் தெடர்பான நிகழ்விற்கு அனைத்து படையினரும் கலந்து கொண்டனர். Buy Kicks | Nike Shoes, Clothing & Accessories