Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th May 2018 15:37:17 Hours

பங்களாதேச இராணுவத்தினர் இலங்கை இராணுவத்தினரால் வரவேற்பு

இலங்கைக்கு வருகை தந்த பங்களாதேச இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் இலங்கை இராணுவத்தினரால் வரவேற்கப்பட்டனர்.

பங்களாதேசத்தைச் சேர்ந்த இந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் 57ஆவது கிழக்கு பெங்கல் ரெஜிமேன்ட் தலைமையகத்தின் பொக்ரா படையணியிலிருந்து பங்களாதேச நிறைவேற்று ஜெனரல் அவர்களது பணிப்புரையின் கீழ் இலங்கைக்கு வருகை தந்தனர்.

இவர்கள் இலங்கைக்கு ஐந்து நாட்களுக்கு பயிற்சிகள் நிமித்தம் வருகை தந்தனர். இவர்களுடன் கொமிஷன் அற்ற அதிகாரிகளின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஜெனரல் அப்துல் ரஷ்சாக் அவர்களும் வருகை தந்தார்.

பங்களாதேசத்தின் நிறைவேற்று ஜெனரல் மேஜர் ஜெனரல் எஸ். எம் மத்தியூர் ரஹமான் அவர்கள் இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களுடன் உரையாடிய பின்பு இந்த பங்களாதேச இராணுவ ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் இலங்கைக்கு வருகை தந்த பங்களாதேச ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் இலங்கைக்கான பங்களாதேச தூதுவர் ஓய்வு பெற்ற ஜெனரல் கிரிஷாந்த சில்வா அவர்களை தூதரகத்தில் சந்தித்தனர்.

Sports News | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News