Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th June 2019 23:58:09 Hours

நைஜீரியா இராணுவ உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்

நைஜீரிய இராணுவத்தின் தலைமையக பயிற்சி மற்றும் மேம்பாட்டு கட்டளை, தலைமை கோட்பாடு மற்றும் போர் மேம்பாட்டுத் துறையின் பிரதானி மேஜர் ஜெனரல் கே.ஐ. அபுதுல்காரியம் அவர்களை உள்ளடக்கி 5 நைஜீரிய இராணுவ உயரதிகாரிகள் இம் மாதம் (19) ஆம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

இவர்கள் தியதலாவையிலுள்ள இராணுவ கட்டளை பயிற்சி நிலையத்தில் இம் மாதம் 19 திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை இடம்பெறும் பல சுற்று ஒருங்கிணைப்பு மாநாட்டு அமர்வுகளிலும், கருத்தரங்குகளில் பங்கேற்றிக் கொள்வதற்காக வருகை தந்துள்ளனர்.

இந்த பயிற்சி கருத்தரங்குகள் இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டி எஸ் பங்ஷஜயா அவர்களது தலைமையில் இடம்பெறும்.

நைஜீரியா இராணுவ உயரதிகாரிகள் இலங்கையில் இருக்கும் நாட்களில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு உள்ளனர்.

நைஜீரிய இராணுவத்தின் தலைமையக பயிற்சி மற்றும் மேம்பாட்டு கட்டளை, தலைமை கோட்பாடு மற்றும் போர் மேம்பாட்டுத் துறையின் பிரதானி மேஜர் ஜெனரல் கே.ஐ. அபுதுல்காரியம், பிரதி கொள்கை மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பீ ஓ சோயர், பயிற்சி பணிப்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ஜி யூ சிப்பூயிஷி, பொது பதவி நிலை அதிகாரி 1 கேர்ணல் ஏ ஐ எம் லாபயி, நைஜீரியா பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் யூஜெனியோ ஒலஸெகுன் ஃபெர்ரியா போன்ற அதிகாரிகள் ஒருங்கிணைப்பு மாநாட்டு அமர்வுகளில் பங்கேற்றிக் கொள்வதற்காக வருகை தந்துள்ளனர். buy shoes | adidas Ultra Boost 1.0 DNA ZX 9000 Mint - Grailify