Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2017 20:02:38 Hours

நிவாரண பணியில் நூற்றுக்கணக்கான இராணுவப் படையினர்

இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களின் உத்தரவின் பேரில் நூற்றுக்கணக்கான இராணுவத் படையினர் சூறாவளிக் காற்று அனார்த காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (30) ஆம் திகதிமாலை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பு படை தலைமையகம் - மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்பு படை தலைமையகம் மகளிர் சேவைகள், பொலிஸ் படையினர், அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் கொழும்பு மாவட்ட செயலகங்கள், கம்பஹா, பதுளை, இரத்தினபுரி, காலி, களுத்துறை, மொனராகலை, நுவரெலியா, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை பகுதிகளில் தற்போது அவசர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

581ஆவது படைபிரிவினரால் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிரதான வீதிகள் மற்றும் சில இடங்களில் வீழ்ந்த மரங்கள், கிளைகள் மற்றும் பாதிக்கப்பட்டபுகையிரத பாதையையும் மீட்பு பணிகள் சம்மந்தமாக அதிகாரிகள் உட்பட 114 க்கும் மேற்பட்ட படையினர் கலந்துரையாடினார்கள்

இதற்கிடையில்,58ஆவது படைப் பிரிவின் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவின் உத்தரவின் பேரில் படையினரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்குவதோடு சில இடங்களில் போக்குவரத்து திருத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் - மேற்கு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களின் உத்தரவின் பேரில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமயக படையினரால் தற்போது பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்தசெல்ல படையினர் உதவுகின்றன.

இதற்கிடையில்இபாதுகாப்பு படைத் தலமையகம் தியத்தலாவையில் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் பணிப்பரைக்கு அமைய பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பொதுமக்களைக் காப்பாற்றுவது மற்றும், தற்போது பாதிக்கப்பட்ட பிரதேசங்களான பெரகல, ஹப்புதளை, மற்றும் பண்டாரவளை மற்றும்பாதிக்கப்பட்டவீதிகள், பகுதிகளில் தற்போது அவசர மீட்பு பணிகளில்ஈடுபட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு தற்போது இராணுவத் படைத் தலைமையகத்தின் மேற்பார்வையிடப்பட்டுள்ளது.

Sports News | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta