Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2017 20:09:15 Hours

நில்வலா ஆற்றின் குளக்கட்டில் பிளவுபட்டிருக்கும் பகுதிகளை திருத்தும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபாடு

இராணுவ தளபதிலெப்டினன்ட் ஜெனரல் மகேஷ்சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கமையமேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் இணைந்து 72 மணித்தியாலத்தினுள் நில்வலா ஆற்றின் அனைக்கட்டுக்கு அருகாமையில் உள்ள கடுவ, மலிம்பட பிரதேசங்களில் எற்பட்டிருக்கும் பிளவுளை திருத்தும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

58 டைப் பிரிவின் கீழ் இயங்கும் 581படைப்பிரிவு மற்றும் 3 ஆவது(தொ) கெமுனு காலாட் படையணிகள்20 மீற்றர் நீளம் கொண்ட ஒரு சங்கிலித் தொட்டியை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

கொழும்பிலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 படைப் பிரிவு, 142 படைப்பிரிவுகளுடன் இணைந்து 6 ஆவதுகெமுனு காலாட்ப (GW), 9 இலங்கைஇலேசாயுத காலாட்படை(SLLI), 11 விஜயபாகு காலாட்படைப் படை (VIR) மற்றும் 10 (V) இலங்கை தேசிய படையணி(SLNG) படையினருடன் இணைந்து ,களனி மின் நிலைய வளாகம், மட்டக்குளிய, சுகததாசா ஸ்டேடிய வளாகம், அம்படல, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாலம்பே, கோக்கந்தர, முல்லேரியா , திக்கன்னவத்த,மத்தேகொட,பொது நூலக பகுதி,கெக்ரி வீதி, மலலசேகர மாவத்தை, விஹாரா மஹாதேவி பூங்கா, துன்முல்ல சந்தி, பாமங்கடை பிரதேசங்களில் துப்பரவு பணகளில் ஈடுபட்டனர்.

மேலும், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால்இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியினால் (SLSC) கொழும்பு - பதுளை புகையிரத பாதையில் ஓஹியா மற்றும் தியத்தலாவ இரயில் நிலையங்களுக்கிடையிலான புகையிரத பாதைகளில் வீழ்ந்திருந்த மரங்ளை அகற்றி துப்பரவு பணிகளில் ஈடுபட்டனர்.

மற்றைய 25 க்கும் மேற்பட்ட படையணியின்மற்றைய குழு ஓஹியா உதவியியவட்ட பிரதேசத்திற்கு விரைந்து சென்றதுடன், உடனடியாக நிலச்சரிவுஅச்சுறுத்தலில் பாதிப்டையவிருந்த பொது மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், மத்திய பாதுகாப்பு படையினரின் உதவியுடன் நீர் சுத்திகரிப்பு அலகு மோசமாக பாதிக்கப்பட்டதிலிருந்து அதே தினத்தன்று நீர் திணைக்கள அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் தியத்தலாவவில் உள்ள எலியேகம தெற்கில் சேதமடைந்த நீர் உந்தி இயந்திரங்களை சுத்தப்படுத்தி மற்றும் பழுது பார்க்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டனர்.

மேலும்துருப்புகள் (1) ஆம் திகதி வெள்ளிக் கிழமைகாலை 9.00 மணியளவில் மென்டிஸ் ஹெனா, பொலபிடிய பிரதேசத்திலிருந்து இறந்தவர் ஒருவருனின் பூதவுடலையும் படையினர் மீட்டெடுத்தனர்.

Nike Sneakers | New Releases Nike