Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2018 14:10:32 Hours

நாடுபூராக அனர்த்த பணிகளில் ஆயிரம் இராணுவத்தினர் ஈடுபாடு

இயற்கை அனர்த்த பணிகளின் நிமித்தம் காலி, களுத்தரை, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இராணுவத்தினர் 300 பேர் செவ்வாய்க் கிழமை (22) ஆம் திகதி ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இருபத்தைந்து படகுகளில் இராணுவத்தினர் கினிதும, பலிந்தனுவர, கம்புறுபிடிய, இரத்தினபுரி மற்றும் புத்தளம் பிரதேசங்களில் 1000 இராணுவத்தினர் இயற்கை அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இயற்கை அனர்த்த பணிகளில் 25 பாதுகாப்பு படகுகளும், 620 கடற்படை வீரர்களும், 270 விமானப்படையினர்களும் இந்த அனர்த்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்கள் தெரிவித்தார்.

14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுஹேரா, 141 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன ரனவக அவர்களது மேற்பார்வையில் களனி, பகரு ஓயா மற்றும் மல்வான பிரதேசங்களில் இயற்கை அனர்த்த பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தினர்.

மேலும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 ஆவது படைத் தலைமையகத்தினால் நாவலப்பிட்டி பிரதேசத்தில் அனர்த்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டாவது இராணுவ சமிக்ஞை படையணி மற்றும் 111 ஆவது படைத் தளபதி கேர்ணல் சனத் அலுவிஹார அவர்களது தலைமையில் கிதுல்கோட்டை, ஜயசுந்தரகம மற்றும் லபுவலிக்கொட்டுவ பிரதேசம் மற்றும் சோலங்கந்த கிறிஸ்தவ தேவாலய பிரதேசங்களிலும் இராணுவத்தினர் அனர்த்த பணிகளை மேற்கொண்டனர்.

latest jordan Sneakers | Air Jordan Release Dates 2020