Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th April 2018 14:25:27 Hours

நாடு முழுவதும் இராணுவ பங்களிப்புடன் அமைக்கப்பட்ட வெசாக் மண்டலங்கள் ஆயிரக்கணக்கான மக்களை கவர்ந்தன

இலங்கை இராணுவ படையினரால் தேசிய வெசாக் தினத்தை (ஏப்ரல் 29) முன்னிட்டு இராணுவ தலைமையகம், நாடு பூராகவும் அமைந்திருக்கும் இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையங்கள் மற்றும் பௌத்த லோக்க மாவத்தை, வாளுகாரமைய, கொள்ளுபிடிய மற்றும் கங்காராம உட்பட நாடு பூரா வெவ்வேறு இடங்களில் விசேட அலங்காரங்களுடன் மின் விளக்குகளும் மக்களின் பார்வைக்கு காட்ச்சியாக காணப்பட்டனர்.

இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் ஆலோசனைக்கமைய இராணுவ தலைமையகம் மற்றும் இராணுவ பௌத்த சங்கத்தினர் நாடு பூராக கொண்டாடும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கவனம் செலுத்தும் முகமாக மின் விளக்கு அலங்காரங்கள், பக்தி கீதங்கள் தான நிகழ்வுகளுடன் விசேட பௌத்த மத பூஜைகளுக்கும் வழங்கினர்.

இந்த வருட வெசாக் நிகழ்வான (ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 2 ஆம் திகதி வரை) தொடங்கப்பட்டது அதன் படி மதிப்புக் குறிய ஜனாதிபதி அவர்களால் (28) ஆம் திகதி சனிக் கிழமை ஆராம்பிக்கப்பட்டதின் முன் தேவகிரி ரஜமகா விகாரையிலும் இராணுவாத்தினரால் கட்டப்பட்ட பொத்த கட்டிடம் (27) ஆம் திகதி புத்தர் சசானாவின் கௌரவ அமைச்சர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் படைத் தலைமையகத்துக்கு கீழ் இயங்கும் அனைத்து படைத் தலைமையங்கள் படைப் பிரிவுகளின் படையினர்களின் பங்களிப்புடன் யாழ் நாக விகாரை வளாகத்தில் வெசாக் கூடு மற்றும் மின் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு “யாபா பட்டுணய் தஹம் அமாவய்” எனும் தலைப்பில் வெசாக் பந்தல் அமைக்கப்பட்டதுடன் தானமும் வழங்கப்பட்டது. அத்துடன் கலைச் கலாச்சார நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக நாவட்குளி மாணவர்களும் படையினரும் இணைந்து பக்தி கீதம் பாடினர்.

அதேபோல் வவுனியா மாவட்ட செயலகத்தினரின் ஒத்துழைப்புடன் வெசாக் தினத் கொண்டாடும் முகமாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் படைத் தலைமையகத்தில் பக்தி கீதம் தான நிகழ்வு மற்றும் வெசாக் கூடு கண்காட்ச்சியுடன் பௌத்த கொடிகளால் அலங்கார படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் கலைச் கலாச்சார நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக இராணுவ பாடகர்களால் சிங்கள மற்றும் தமிழிலும் மொழிகளிலும் பக்தி கீதங்கள் பாடப் பட்டது.

அதேபோல் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வல அவர்களின் வழிகாட்டலின் கீழ் செவன பிடிய பிரதேசத்தில் அமைந்திருக்கும் பாதுகாப்பு படைத் தலைமையகங்கள் மற்றும் பொலநறுவை ,வெலிக்கந்த, திருக்கோணமலை ,மற்றும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் வெசாக் கூடுகள் கண்காட்ச்சி,பௌத்த நாடகம்,பக்தி கீதம் மற்றும் தானம் போன்றன ஏற்பாடு செயய்பட்டுருந்தது.

அதேபோல் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்சங்க ரணவன அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிளி நொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுடன் போதி பூஜை வெசாக் கூடுகள் கண்காட்ச்சி, பக்தி கீதம் மற்றும் தானம் போன்றன ஏற்பாடு செய்யபட்டுருந்தது.

அதேபோல் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் முல்லைத் தீவு பிரதேசத்தில் போதி பூஜை அலங்கார வெசாக் கூடுகள் கண்காட்ச்சியும் பொதுமக்களுக்காக தானம் போன்றன வழங்கப்பட்டது.

இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் ஆசிர்வாதத்துடன் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்திய பிரிய லியனகே அவர்களின் ஆலோசனைக்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினரல் பிங்கிரிய தேவகிரி ரஜமகா விகாரையின் கட்டுமான வேலைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்தனர்.

வெசாக் பௌர்ணமி தினமான (ஏப்ரல் 29) இராணுவ தலைமையகம் மற்றும் பனாகொடை இராணுவ தலைமையகத்தில் அமைந்திருக்கும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினராவும் பௌத்த சங்கத்தினராலும் இணைந்து பனாகொடை ஸ்ரீ மகா பௌத்த ராஜராம விகாரையில் பௌத்த மத பூஜையூம் இடம் பெற்றது.

அதேபோல் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் கலைப் படைப்பு மற்றும் கலை திறன்களைக் வெளிகாட்டும் முகமாக புத்தரின் வரலாறு பற்றிய பக்தி கீதங்கள் போன்றன பௌத்த லோக்க மாவத்தை, வாளுகாரமைய,கொள்ளுபிடிய மற்றும் கங்காராம தேசிய புத்தர் ரஷ்மி பேன்ற இடங்களில் காட்ச்சி படுத்தப்பட்டன.

அதேபோல் தியதலாவையில் அமைந்திருக்கும் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முத்து குமார விளையாட்டு மைதானத்தில் வெசாக் கூடு கண்காட்ச்சி மற்றும் உட்பட பௌத்த மத நிகழ்வுகள் இடம் பெற்றதோடு (29) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மலை தியதலாவை நகரத்தில் தானம் மற்றும் பக்தி கீத போட்டிகளும் இடம் பெற்றது. மேலும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 12ஆவது படையினர்களால் ஹம்பந்தோட்டையில் வெசாக் நிகழ்வூகள் ஏற்பாடு ஒழுங்கமைக்கப்படனர்.

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவ படையினர்களால் (30) ஆம் திகதி மேலும் சிறப்பு வெசாக் நிகழ்வூகள் செயல்படுத்த உள்ளனர்.

மேலும்,அனுராதபுரம், சாலியபுரை பிரதேசத்தில் அமைந்திருக்கும் கஜபா படையணியின் படையினரால் பல வெசாக் கூடுகள் கண் காட்ச்சிக்கு வைக்கப்பட்டன.

அதேபோல்,ரத்னபுர,குருவிட்ட பிரதேசத்தில் அமைந்திருக்கும் கெமுனு ஹேவா படையணி படைத் தலைமையகத்தின் படையினர்களின் பங்களிப்புடன் வெசாக் நிகழ்வு இடம் பெற்றது.

மேலும், சாலியவெவ,கலாஓயாவில் அமைந்திருக்கும் இராணுவ தொழிற் பயிற்ச்சி முகாமிலும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெசாக் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

Nike Sneakers | Nike