Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th May 2018 23:00:29 Hours

நாடு பூராக இடம்பெற்ற தேசிய படை வீரர் ஞாபகார்த்த நினைவு தின விழா

தேசிய ஞாபகார்த்த நினைவு தின விழா மே மாதம் 19 ஆம் திகதி பத்தரமுல்லையில் அமைந்துள்ள பாராளுமன்ற மைதானத்தில் இடம்பெற்றன.

அன்றைய தினமே முப்படையினருக்கு பதக்கமளிப்பு நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் மேன்மை தங்கிய ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன. பின்பு அதனை தொடர்ந்து அன்றைய தினம் இரவு களனி விகாரையில் ஜனாதிபதியின் தலைமையில் முப்படையினர் மற்றும் பொலிஸாரது பங்களிப்புடன் ஆலோக்க விளக்கு பூஜைகள் இடம்பெற்றன.

இந்த நினைவு தினத்தை முன்னிட்டு இந்த மாதம் 18 ஆம் திகதி இலங்கை இராணுவத்தினால் நாடு பூராக உள்ள அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்கள், படைப் பிரிவுகள், பயிற்சி நிலையங்கள், பாதுகாப்பு முன்னரங்க தலைமையகங்கள், பிரிக்கட் படைத் தலைமையகங்களில் தேசிய கொடி ஏற்றி இந்த நினைவு தின விழா கொண்டாடப்பட்டன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எல்.எம் முதலிகே அவர்களது தலைமையில் சமய ஆசீர்வாத நிகழ்வுகள் அம்பாறை பிரதேசங்களில் இடம்பெற்றன.

பௌத்த சமய ஆசிர்வாத நிகழ்வுகள் மஹாவபிய விகாரையிலும், இந்து பூஜை நிகழ்வுகள் அம்பாறை கணபதி கோயிலும், முஸ்லீம் சமய நிகழ்வுகள் சம்மாந்துறை பள்ளிவாசலிலும், கிறிஸ்த்தவ நிகழ்வுகள் அம்பாறை புனித இக்னேசியஷ் கிறிஸ்த்தவ பள்ளியிலும் இடம்பெற்றன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் 59, 64 மற்றும் 68 ஆவது படைப் பிரிவுகள் இணைந்து முல்லைத்தீவு பிரதேசங்களில் இந்த நினைவு தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன. முதலாவதாக முள்ளியாவளை ஜம்மா பள்ளிவாசலிலும், புதுக்குடியிருப்பு குளந்தன கிறிஸ்த்தவ தேவாலயத்தில், ஒட்டுசுட்டான் சிவன் கோயிலும், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது பங்களிப்புடன் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் பௌத்த போதிபூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் தலைமையில் இந்த நினைவு தின நிகழ்வு கிளிநொச்சி பிரதேசங்களில் இடம்பெற்றன.

முதலாவது சிங்கப் படையணி, 573 ஆவது பிரிக்கட் மற்றும் 57 ஆவது படைப் பிரிவினர் இணைந்து பரந்தன புனித அந்தோனியார் தேவாலயத்தில் 18 ஆம் திகதி கிறிஸ்த்தவ சமய ஆசீர்வாத நிகழ்வுகளும், 9 ஆவது விஜயபாகு காலாட் படையினர் மற்றும’ 571 ஆவது படைத் தலைமையகம் இணைந்து பாரதிபுரம் பெப்திஸ் கிறிஸ்த்தவ தேவாலயத்தில் 19 ஆம் திகதி சமய ஆசீர்வாத நிகழ்வுகளும், 571 ஆவது படைத் தலைமையகம், 7 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 16 ஆவது (தொண்டர்) இலேசாயுத காலாட் படையணியினரது பங்களிப்புடன் பௌத்த போதி பூஜை நிகழ்வுகள் கிளிநொச்சி லும்மினி விகாரையில் இடம்பெற்றன.

மேலும் 571 ஆவது படைத் தலைமையகம், 16 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினர் இணைந்து சித்தி விநாயகர் கோயிலிலும், 574 ஆவது படைத் தலைமையகம் மற்றும் மூன்றாவது கஜபா படையணியினர் இணைந்து மாங்குளம் கணபதி கோயிலில் ஆசீர்வாத பூஜை நிகழ்வுகளை ஒழுங்கு செய்தனர்.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இந்து கோயில், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முஸ்லீம் பள்ளிவாசலிலும் இந்த சமய ஆசிர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றன,

படை வீரர் தினத்தை முன்னிட்டு 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா மற்றும் படைத் தளபதிகளது பங்களிப்புடன் ‘போதி பூஜை’ நிகழ்வுகள் ஶ்ரீ விமலதர்மதுத விகாரையிலும், அநுராதபுர புனித சூசையப்பர் தேவாலயத்திலும் மே மாதம் 18 – 19 ஆம் திகதிகளில் இந்த நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

Sportswear Design | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat