Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th May 2018 18:27:32 Hours

நகராட்சி மன்ற அலுவலகர்களுக்கு இராணுவ தலைமைத்துவ பயிற்சிகள் (2 வது கட்டம்)

இரண்டாம் கட்டமாக இலங்கை இராணுவத்தினரால் தலைமைத்துவம் திறமைகள் மற்றும் நேர்மறையான அணுகுமுறைகள்' பற்றிய பயிற்சிப் பட்டறையானது தியதலாவை, இராணுவ பயிற்சி முகாம்களில் இராணுவ அதிகாரிகளால் நகராட்சி மன்ற அலுவலகர்களுக்கு மே மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை வழங்கப்பட்டன.

இந்த பயிற்சிகள் உள்ளூர் அரச திணைக்களத்தினால் விடுத்த வேண்டுகோளுக்கமைய தலைமைத்துவ திறமைகள் மற்றும் திறன்களை அபிவிருத்தி செய்வதற்கும், சவால்களை வெல்வதற்கும், சமூக நெறிமுறைகள் மற்றும் சமூக நடத்தைகளை கற்பிப்பதற்கும், தொழில்சார் திறமை மற்றும் அரச அதிகாரிகளின் மனோபாவத்தை ஊக்குவிப்பதற்கும் மன ஆற்றலை உருவாக்குதலுக்கும் இராணுவத்தினரால் இந்த பயிற்சி வழங்கப்பட்டன.

இந்த பயிற்சியில் 83 ஆண் மற்றும் 34 பெண் அதிகாரிகளும் பயிற்சி அமர்வுகளில் பங்கேற்றனர்.

buy footwear | adidas Campus 80s South Park Towelie - GZ9177