Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th June 2018 14:30:52 Hours

தேசிய மூய்தாய் குத்துச் சண்டைப் போட்டியில் இராணுவத்தினருக்கு வெற்றி

நாவலப்பிடியில் உள்ள ஜயதிலக மைதானத்தில் மே மாதம் 26 – 27 ஆம் திகதிகளில் இடம்பெற்ற தேசிய மூய்தாய் குத்துச் சண்டைப் போட்டியில் இலங்கை இராணுவ குத்துச் சண்டை அணியினர் 6 தங்கப் பதக்கங்களையும், 5 வெள்ளி பதக்கங்களையும், 4 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இராணுவ மூய் தாய் சங்கத்தினால் ஜூன் மாதம் 11 ஆம் திகதி , 2017 ஆம் ஆண்டு அன்று இராணுவ குத்துச்சண்டைக் குழுவிற்கு ஒரு துணை குழுவாக நிறுவப்பட்ட பின்னர் இராணுவ முயர் தாய் குழுவானது 11 மாதங்களுக்குள் வெற்றிகரமாக 80 இராணுவ வீரர்களை பயிற்சியளிப்பதில் முன்னேற்றத்தை வெளிக் காட்டியுள்ளது.

இந்த குத்துச்சண்டை விளையாட்டின் மதிப்பை தெரிந்து கொண்ட இராணுவ தளபதி, 8 கலைக்களிலான கலைகளில் பல்வேறு வலுவூட்டலின் மூலம் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர்.

நாவலப்பிட்டியில் இடம்பெற்ற தேசிய போட்டியில் இலங்கை இராணுவத்தினர், கடற்படை அணிகள் மற்றும் பல சிவில் விளையாட்டுக் கழகங்கள் போட்டியிட்டன.

இறுதி நாளன்று இடம்பெற்ற இறுதிச் சுற்றுப் போட்டிக்கு பிரதம அதிதியாக தாய்லாந்தின் தூதகர் வருகை தந்து வெற்றிக் கோப்பையையும் சான்றிதழையும் வெற்றியாளர்களுக்கு வழங்கி வைத்தார்.

இராணுவ அணிகளிலிருந்து வெற்றி பெற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்ற வீர வீராங்கனைகளுக்கு இராணுவ மூய் தாய் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் மனோஜ் முதன்னாயக அவர்களினால் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

முய் தாய் குத்து சண்டை போட்டியானது 53 ஆவது விளையாட்டாக தற்போது நாடுகளுக்கு இடையில் பிரபல்யமடைந்து வருகின்றது.

buy footwear | Nike for Men