Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th December 2017 15:16:23 Hours

தேசிய பாதுகாப்பு படையணி தலைமையகத்திற்கு புதிய படைத் தளபதிபதவியேற்பு

இலங்கை இராணுவத்தின் தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதியாக துஷ்யந்த ராஜகுரு அவர்கள் கடந்த புதன்கிழமை (13) ஆம் திகதி காலை தனது 14ஆவது படைத் தளபதி பதவியை குருநாகலில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு படையணி தலைமையகத்தில் பொறுப்பேற்று கொண்டார்.

இனைத்தொடர்ந்து> இப்படைப்பிரிவின் கட்டளை தளபதியான பிரிகேடியர் டி.எச்.எம்.டபில்யூ.பி தம்மித்த அவர்களால் புதிய படைத் தளபதி வரவேற்கப்பட்டுஇராணுவ; அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் புதிய படைத் தளபதியினால் மரணித்த படையினரின் நினைவுதுாபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இவர்களை கௌரவப்படுத்தும்வகையில் படையினரால் மலரஞ்சலி செலுத்தி மரியாதை வழங்கப்பட்டது.

பின்பு படைத் தலைமையக வளாகத்தினுள் “நா” என்ற மரக் கன்று நடும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதி கட்டளை அதிகாரியான கேர்ணல் நலின் பண்டார மற்றும் தேசிய பாதுகாப்பு படையணியின் உயர் அதிகாரிகள்> படைப்பிரிவின் அதிகாரிகள்கலந்து கொண்டனர்.

இதற்கிடையில் தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரால் பியல் விக்ரமரத்தன அவர்கள் தனது படைத் தளபதி பதவியை சனிக்கிழமை (09) ஆம் திகதி ஒப்படைத்தார்.

அதனைத் தொடர்ந்து பதவி வெளியேறும் இப்படையதிகாரிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பதவி வெளியேறும் இப்படையதிகாரி அனைத்து படையினருடனும் சாஜன் உணவுசாலையில் அனைத்து அதிகாரிகளிடமும் கலந்துறையாடினார்.

அதன் பின்னர் பதவியில்; வெளியேறும் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரால் பியல் விக்ரமரத்தன அவர்கள் மரணித்த படையினர் நினைவுதுாபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

அன்றைய தினம் மாலை படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வில் பதவியில்; வெளியேறும் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரால் பியல் விக்ரமரத்தன அவர்கள் சிறப்பு செற்பொழிவுறையும் வழங்கினார்.

url clone | Sneakers