Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th July 2017 16:41:57 Hours

திறன்சாரந்த தொழில்துறை மிக்க இராணுவத்தை உருவாக்குவதாக புதிய இராணுவ தளபதி அதிகாரிகளிடம் தெரிவிப்பு

புதிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக இன்று (10) காலை இராணுவ உயர் அதிகாரிகளுக்கு இராணுவ தலைமையகத்தில் உறையாற்றும் போது இந்த கருத்தை தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் இராணுவத்தினர் ஒரு பண்புள்ள தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும். நாம் எப்போதும் ஒரு நேர்மறையான அணுகுமுறை மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் வரவேற்போம். எப்போதும் பொறுமையுடன் கேட்டுக் கொள்ளல் மற்றும் புதிய சவால் மற்றும் இலக்குகளை அர்ப்பணிப்புடன் அடைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

என்னை நம்பி மேன்மை தங்கிய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அவர்கள் இராணுவ தளபதி பதவியை எனக்கு பொறுப்பு தந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவிப்பதுடன் முன்னாள் இராணுவ தளபதிகள் 21 பேர் ஆற்றிய சிறந்த சேவையை நானும் வழங்குவேன் என்றும் தனது 36 வருட பூர்த்தி காலத்தினுள் தனது முதலாவது இராணுவ தளபதி ஜெனரல் டென்சில் பெரேரா , அனைத்து இராணுவ தளபதிகள் மற்றும் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன்.

மற்ற நிறுவனங்களில் அத்துடன் உலகின் இரண்டாவது தொழில்முறையாக இராணுவம் இருக்க வேண்டும். இந்த உண்மை போட்டி ஒரு நியாயமான மற்றும் கௌரவமான குணாதிசயங்கள் கொண்டு பெற்றவர்களாக இருக்க வேண்டும். பின்னர் யாருக்கு வேண்டுமானாலும் இராணுவ தளபதி பதவிக்கு வரமுடியும்.

இராணுவத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த இராணுவ தளபதி திறன்சாரந்த தொழில்துறை மிக்க இராணுவத்தை உருவாக்குவது தொடர்பாகவும் அனர்த்த முகாமைத்துவம், இன முன்னேற்றம், நல்லினக்கம் மற்றும் மற்றைய தேவைகள் தொடர்பாக தெரிவித்தல், வெளிப்படையாக பாரம்பரிய மற்றும் பாரம்பரியற்றவைகளை மேற்கொள்ளல். வேண்டிய சவால்வளுக்கு முகம் கொடுப்பதற்கு இராணுவத்தினர் தயாராக இருக்கின்றனர்.

நாம் இராணுவத்தின் யோசனை முன்னனி வகிக்கின்டோம். அத்துடன் நான் எனது கடமைகளை பொறுப்புடன் ஆற்றுவேன். இராணுவத்தை பலம் மிக்க ஆற்றலுடன் உயர்ச்சியடையச் செய்வேன். இராணுவத்தின் உயர் நிலை மற்றும் கீழ் மட்டத்தினருக்கும் சமவுரிமையாக நீதி வழங்கப்படும் என்றும், இராணுவத்தினருக்கு சிறந்த பயிற்சி மற்றும் நலன்புரி திட்டங்களை மேற்கொள்வேன். அத்துடன் இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது எமது இராணுவ எண்ணிக்கைக்கு ஏற்றவாறு முன் வைத்து செல்வோம்.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும். 2009ஆம் ஆண்டிற்கு முன்பும் பின்பும் சேவை புரிந்த அதிகாரிகள் இப்படைவீரர்கள் இரண்டு அடிப்படையில் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டம் வகித்துள்ளோம்.

இராணுவத்தில் 1/3யுத்தத்திற்காகவும், மற்றைய 1/3தேசிய ஒருமைபாட்டிற்கும்,1/3இராணுவ நிர்வாக கடமைகளுக்கும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன்படி இராணுவ மேம்பாட்டை உயர்ச்சியடையச் செய்வதற்காக அனைத்து பதவியில் உள்ளவர்களும் சிறந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும், தன்னுடைய இறுதி உரையின் போது பரிசுத்த சேவையை ஆற்ற வேண்டும் என்று இராணுவ தளபதி வலியுறுத்தினார்.

jordan release date | Nike Air Max 97 GS Easter Egg 921826-016 , Fitforhealth