Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th December 2018 11:36:38 Hours

திருக்கோணமலை கிழக்கில் இராணுவ வசமிருந்த காணிகள் விடுவிப்பு

திருக்கோணமலை கிழக்கில் பாதுகாப்புப் படையினரின் நடைமுறையில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான 12 ஏக்கர் காணி உறுதி பத்திரம் ஜனாதிபதி குழுவினரின் ஒத்துழைப்புடன் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால். கிழக்கு மாகாண ஆளுநர் திரு. ரோஹித போகொல்லாகம மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளர் திரு. ஏ புஷ்பகுமார் முன்னிலையில் (10) அம் திகதி திங்கட்கிழமை ஆளுநரின் அலுவலகத்தில் வைத்து கையழிக்கப்பட்டன.

அதன்படி கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர அவர்களால் 22 ஆவது படைப் பரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க ஆகியோர் முன்னிலையில் அவர்களுக்கான காணி உறுதி பத்திரம் உத்யோகபூர்மாக கையழித்தனர்.

அதற்கமைய குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட செயலாளர் பிரிவில் கல்லாம்பட்டுவில் 5 ஏக்கர் நிலமும், சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவில் சித்தாறுவில் 2 ஏக்கர், தோப்பூரில் 3 ஏக்கர், மற்றும் முத்தூர் பிரதேச செயலாளர் பிரிவில் பட்டாலிபுரத்தில் 2 ஏக்கர் நிலங்களும் விடுவிக்கப்பட்டன. கிழக்கில் சரியான நில உரிமையாளர்களான ஜனாதிபதி பணிக்குழுவின் வழிகாட்டுதலுக்ககைமய வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர அவர்கள் கூறியதாவது : பொதுமக்களின் பாதுகாப்பை பாதுகாப்பதற்கு அந்த நிலங்கள் முன்னர் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், ஆனால் இப்பகுதியில் அமைதியான சூழ்நிலை நிலவுவதும், பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதற்கமைய இந்த நிலங்களை விடுதலை செய்ய உதவியது என்றும் தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன் கெளரவ. கிழக்கு மாகாண ஆளுநர் திரு. ரோஹித்த போகொல்லாகம அவர்கள் இராணுவத்தினருக்கு தமது நன்றிகளை தெரிவித்ததோடு, மூன்று சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்கின்ற அதேவேளை, அரசாங்கத்தின் தொடர்ச்சியான நல்லிணக்க மற்றும் இன ஒற்றுமைக்கான ஒரு வரலாற்று தூண்டுதலையும் சேர்த்துள்ளது என்றார்.

இத் திட்டமானது 2017 ஆம் ஆண்டில் முன்னர் யாழ் தளபதியாக அவர் சேவையாற்றிய போது இராணுவத்தின் தளபதியால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்முயற்சியின் பின்னர் அத்தகைய காணிகள் விடுவிப்பு வடக்கில் ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டது.Nike Sneakers | Women's Nike Air Max 270 trainers - Latest Releases