Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th August 2018 06:20:11 Hours

ஜனாதிபதியினால் இராணுவ உயரதிகாரிகளுக்கு பதவியுயர்வு

முப்படைகளின் முனைஞரும் பிரதானியுமான மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இராணுவத்தில் பிரிகேடியர் தரத்திலுள்ள உயரதிகாரிகள் ஐவர் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் இராணுவ செயலகத்தினூடாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மனிதாபிமான நடவடிக்கைகளில் பாராட்டுக்குரிய பாத்திரங்களை வகித்து யுத்தத்தில் காயமடைந்த இந்த நான்கு மூத்த அதிகாரிகளும் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் எதிரான போராட்டத்தில் நாட்டிற்கு சேவை செய்து தங்களது அவயங்களை இழந்தவர்களாவர்.

கஜபா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் டி.ஜே.ஐ.பி கமகே தற்பொழுது இராணுவ சொத்து மேலாண்மை பணிப்பாளராக கடமையாற்றுகின்றார். இவர் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு இவர் இராணுவ நலன்புரி பணியகத்தின் பிரதி பணிப்பாளராகவும், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானியாகவும் கடமை வகித்துள்ளார்.

சிங்கப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் எச். ஆர் விக்ரமசிங்க இராணுவ வைத்தியசாலை மேலாண்மை மற்றும் பராமரிப்பு பணிப்பாளராக தற்பொழுது கடமை வகிக்கின்றார். இவர் 2018 ஆம் ஆண்ட மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு இவர் இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் மத்திய படைத் தளபதியாகவும், இராணுவ பணிப்பாளர் இயக்குனராகவும், இராணுவ மகளீர் படையணியின் மத்திய படைத் தளபதியாகவும், சிங்கப் படையணியின் மத்திய படைத் தளபதியாக கடமை வகித்துள்ளார்.

இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ஜே.ஆர் அம்பேமோட்டை இவர் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இவர் தற்பொழுது மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணியகத்தின் பணிப்பாளராக கடமை வகிக்கின்றார்.

கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் டப்ள்யூ.எச்.எம் மனதுங்க இவர் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இவர் தற்பொழுது ரணவிரு வள மையம் பணியகத்தின் பணிப்பாளராக கடமை வகிக்கின்றார்.

இலங்கை சமிக்ஞை படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் டீ.ஏ.பி.என் தெமடம்பிடிய 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக தற்பொழுது கடமை வகிக்கின்றார். இவர் 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் பதவியுயர்த்தப்பட்டார். இவர் தொழில் நுட்ப பணிப்பாளராகவும், 552 ஆவது படைத் தளபதியாகவும் கடமை வகித்துள்ளார்.

அத்துடன் 25 லெப்டினன்ட் கேர்ணல் தரத்தில் இருக்கும் உயரதிகாரிகள் கேர்ணல் தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டனர். Authentic Nike Sneakers | Air Jordan Release Dates 2021 Updated , Gov