Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th June 2018 20:50:57 Hours

சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிவிலியன்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தைச் சேர்ந்த படையணிகளான 16 ஆவது கஜபா படையணி மற்றும் 1 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த படை வீரர்களினால் சூறாவளியால் பாதிப்படைந்த உடுபடவ பிரதேச சபைக்குரிய பிபில்தெனிய, துனுகதெனிய, உததெனிய, மீஹாபெலஷ்ச மற்றும் பொல்ஹககர பிரதேசங்களில் சீர்திருத்தும் பணிகளில் (10) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை இராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்களது பணிப்புரைக்கமைய 14 படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 143 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் பாலித பெரேரா அவர்களது தலைமையில் இப்பிரதேசத்தில் சூறாவளியால் பாதிப்புக்கு உள்ளான வீடுகளை சீர்திருத்தும் பணிகள் மற்றும் முறிந்த பெரும் மரங்களை அகற்றும் பணிகளில் இந்த இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

இந்த பணிகளில் 50 இராணுவத்தினர் இணைந்து கொண்டனர்.

Running Sneakers Store | Air Jordan