Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2018 09:12:52 Hours

சுவிஸ்லாந்து தூதுவர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கை, மாலைதீவு, சுவிஸ்லாந்து தூதுவரான மேன்மை தங்கிய ஹெயின்ஷ் வோகர் நெதர்கோர் (Heinz Walker-Nederkoorn) அவர்கள் இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை (19) ஆம் திகதி திங்கட் கிழமை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

வருகை தந்த தூதுவரை இராணுவ பிரதி கேர்ணல் கே.ஏ.ஏ. உதய குமார அவர்கள் வரவேற்றார்.

இந்த நட்புரீதியான சந்திப்பின்போது, யுத்தத்தின் பின் காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கில் சமரசம் மற்றும் இன ரீதியிலான ஈடுபாட்டை முன்னெடுப்பதற்காக இராணுவத்தின் பொறுப்புகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்த சந்திப்பின் போது சுவிஸ்லாந்து தூதரகத்தின் சிரேஷ்ட பிரதிநிதியும் கலந்து கொண்டார்.

Mysneakers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE