Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th September 2018 14:49:37 Hours

சுத்திகரிப்பு இயந்திரங்களின் மூலம் குடிநீர் விநியோகம்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51, 551, 521 ஆவது படைத் தலைமையகங்கள் 4 ஆவது இலங்கை மின்சார பொறியியலாளர் படையணி பயிற்சி பாடசாலை, 4 ஆவது பீரங்கிப் படையணி, 10 ஆவது பீரங்கிப் படையணி, 2 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 4 ஆவது சிங்கப் படையணி, 12 ஆவது கெமுனு காலாட் படையணி, 5 ஆவது விஜயபாகு காலாட் படையணிகளுக்கு கடற்படையின் ஒத்துழைப்புடன் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொறுத்தப்பட்டு குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டன.

இந்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன அவர்களது அழைப்பையேற்று யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் செப்டம்பர் 10 – 11 ஆம் திகதிகளில் வருகை தந்து இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையங்களை திறந்து வைத்தார்.

மேலும் சுத்திகரிப்பு இயந்திரங்களின் மூலம் யாழ் பிரதேசத்தில் இருக்கும் பிரதேசவாசிகளுக்கும் குடிநீர் வசதிகள் இராணுவத்தினரால் வழங்கப்படுகின்றன. Adidas shoes | Nike