Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2019 11:43:32 Hours

சுதந்திரத்திற்காகவும் ஜனநாயகத்திற்காகவும் உயர்களை அர்ப்பணித்த இராணுவத்தினருக்கு ஜனாதிபதியின் ஆழ்ந்த அனுதாப செய்திகள்

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் மாலியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் பலியான இராணுவத்தினர் சுதந்திரத்திற்காகவும் ஜனநாயகத்திற்காகவும் உயர்களை அர்ப்பணித்தனர் என்றும் இந்த இராணுவத்தினருக்கு ஜனாதிபதியின் ஆழ்ந்த அனுதாப செய்திகளையும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்திகளின் விபரங்கள் கீழ்வருமாறு:- "உலக சமாதானத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் கடமைகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் இலங்கையின் இரண்டு புதல்வர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்ததையிட்டு நான் மிகவும் ஆழ்ந்த கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளேன்.

மனிதகுலத்தின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்காக உலக சமாதான முன்னெடுப்பின் காரணமாக மரணித்த இந்த இராணுவத்தினர்களுக்காக எனது கௌரவ மரியாதையை செலுத்துகிறேன்.

சர்வதேச சமூகங்கள் மற்றும் அமைப்புக்களிடையே இலங்கையின் மதிப்பிற்குரிய உறவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வீரர்கள் ஐக்கிய நாட்டுச் சபையின் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு மனிதகுலத்தின் சுயாதீனத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மாலி தாக்குதலின் போது பலியான கெப்டன் H.W.D. ஜயவிக்ரம மற்றும் கோப்ரல் S.S விஜயகுமார் அவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றேன்.

மேலும் இந்த தாக்குதலில் காயமுற்றுள்ள மூன்று இராணுவத்தினரும் விரைவில் குணமடைவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். Nike Sneakers | Nike Air Max 270