Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2019 15:11:15 Hours

சிபீஎல் நிறுவனத்தின் அனுசரனையில் பாடசாலையில் உள்ள கணனி பிரிவுகளுக்கு உதவிகள்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 62, 622 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் (சிபீஎல்) அனுசரனையில் பதவி சிரிபுர ஜயந்திவேவா மஹா வித்தியாலயத்திற்கு கணனி தொழில் நுட்ப சாதனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

‘மஞ்சி கமட சரன’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் பெறுமதி வாய்ந்த கணனி தொழில் நுட்ப சாதனங்கள் இந்த பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தம்மிக ஜயசிங்க, சீபிஎல் நிறுவனத்தின் வியாபார முகாமையாளர் திரு விஜித நிஷாந்த அமுனுகம, 622 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி கேர்ணல் சாலிய அமுனுகம, சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சுனில் ஜயரத்ன, மேஜர் மஞ்சுள டீ சில்வா, 9 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்திருந்தனர். Best Nike Sneakers | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ