Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd November 2017 17:31:00 Hours

சிங்கப்பூர் மாணவர்களுக்கு இராணுவத்தினால் மிதிவெடி தொடர்பான விளக்கம்

சிங்கப்பூர் ராபில்ஸ் நிறுவனத்தின் மாணவர் குழுவொன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்த குழுவினர் இராணுவ தளபதிக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கொக்குதுடுவாய் வடக்கு இராணுவ முகாமில் மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வ நிகழ்ச்சி திட்டம் (21) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.

இதற்கான ஒழுங்குகள் அனைத்துமே முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த குழுவில் 56 சிங்கப்பூர் மாணவர்களும், 6 ஆசிரியர்கள் மற்றும் அயிட்டன் ஸ்பென்ஸ் டிராவில்ஸ நிறுவனத்தின் 2 பயண வழிக்காட்டிகலும் உள்ளடங்குவார்கள்.

இவர்களுக்கு இராணுவ பொறியியலாளர் படையணியினால் இயந்திரம் மற்றும் பயிற்சிவிக்கப்பட்ட நாய்களை பயண்படுத்தி எவ்வாறு மிதிவெடிகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக ஒத்திகைகள் மூலம் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

பொறியியராளர் படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் அமித் செனெவிரத்ன>மேஜர் என்.கே.பீ.எஸ் ஜயசேகர போன்ற அதிகாரிகாரிகளினால் இந்த வெடி குண்டுகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டது.

எமது நாடு 2020 ஆண்டின் போது பாரிய அபிவிருத்திகளை புரிந்து எமது நாட்டை மேம்படுத்துவதற்கான அபிவிருத்தி திட்டங்களில் இராணுவத்தினர் தங்களது சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்ற கருத்துகளும் இந்த குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டது.

இராணுவ பொறிமுறை பிரதானி மேஜர் ஜெனரல் டட்லி வீரமன் அவர்கள்இந்த குழுவினர்களுக்கான வழிகாட்டுதல்களை மேற்கொண்டுள்ளார்.

jordan release date | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival