Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th August 2017 10:55:34 Hours

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு

கொழும்பு 2017ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கின் ஊடகவியலாளர் சந்திப்பு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் கடந்த செவ்வாய்க் கிழமை (15) இலங்கை மின்சார மற்றும் பொறியியலாளர் படைத் தலைமையக்தில் இடம் பெற்றது.

மேலும் இச் சந்திப்பில் கருத்த தெரிவித்த தளபதி நாம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான வருடம் தோரும் இவ்வாறான கருத்தரங்குகளை நிகழ்த்தி வருகின்ரோம் என , 2017ஆம் ஆண்டிற்கான ஏழாவது தடவையாக இடம் பெறவிருக்ககும் பாதுகாப்பு கருத்தரங்கு (ஆகஸ்ட் 28 – 29) தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேபோன்று வருடாந்தம் நிகழ்த்தப்படும் இப் பாதுகாப்பு கருத்தரங்கில் முன்வைக்கப்படும் புகார்கள் தொடர்பாக இராணுவ பயிற்சிகள் படையணிக்கு சமர்ப்பிக்கப்படும். அத்துடன் மேற்கு பாதுகாப்பு ஆலோசகர்கள் 800 பிரதிநிதிகள் உள்ளடங்களாக 15 வெளிநாட்டு மற்றும் 12 பேச்சாளர்கள் கலந்து கொள்வதுடன் சார்க் நாடுகளின் பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளுக்கும் கலந்து கொள்வர்.

இச் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் திவிரவாதம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் , எவ்வித கட்டுப்பாடுமின்றி ஊடகவியலாளர்கள் தமது கருத்தை தெரிவிக்க இடமளித்தார். அதேபோன்று முன்னர் இடம் பெற்ற இவ்வாறான கலந்துரையாடலின் போதும் தீவிரவாதம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று ஊடகவியலாளர்களால் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான அச்சுருத்தல்கள் தொடர்பான கேள்வியை முன்வைத்தனர். இதன் போது விளக்கமிளித்த இராணுவத் தளபதி சர்வதேச ரீதியில் எவ்வாறான அச்சுறுத்தல்களும் நிலவவில்லை என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் இராணுவ பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர ,இராணுவ பொது நிறுவாகப் பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயசுந்தர,இராணுவ பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜி வி ரவிப்பிரிய மற்றும் இராணுவ ஊடகப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ரொசான் செனெவிரத்ன போன்ரோர் கலந்து கொண்டனர்.

தற்பொழுது உலக குடியரசு தேசிய பாதுகாப்பு மற்றும் சமாதானத்திற்கு ஏற்படும் தீவிரவாத எச்சரிக்கைகள் காரணத்தினால் வன்முறை மற்றும் அடிப்படை கோட்பாட்டுடன் வன்முறை தீவிரவாதத்திற்கு எதிராக பூகோள செயற்பாடு எனும் தலைப்பில் இரண்டு நாட்கள் இந்த கருத்தரங்குகள் இடம்பெறும்.

உலகத்தில் குடியரசின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் மற்றும் சவால்கள் ஏற்பட்டுள்ளது. மத இஅரசியல் மற்றும் உளவியல் சார்ந்த காரணங்கள் பிரச்சினையாக அமைகிறது.

2017ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கு உலகத்திலுள்ள பாதுகாப்பு பங்குதாரர்கள் இ கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்களின் பங்களிப்புடன் இடம்பெறுகின்றது.

பூகோள பாதுகாப்பிற்கு ஏற்படும் பிரச்சினை தொடர்பான விடயங்களை உலகலாவிய ரீதியாக அறிந்து கொள்வதற்காக பூகோள வலய குடியரசு நிபுணர்களின் பங்களிப்புடன் இம்முறை பாதுகாப்பு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு கருத்தரங்கில் தீவிரவாத வன்முறை செப்டம்பர் 11 தாக்குதலில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பூகோள வன்முறை தீவிரவாதம் , தீவிரவாதத்திற்கு எதிராக பாதுகாப்பு செயற்பாடுகள், கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்பு ,பிராந்திய அமைப்புக்களின் பங்களிப்புகள் , உலகளாவிய ரிதியில் செல்வாக்கு செலுத்தும் பாதிப்புகள் , நுண்ணறிவும் சைபர் சவால் மற்றும் வியூகம் பாதுகாப்பு படைகள் மற்றும் பணிக்குழு சிவில் உறவுகள் , ஐக்கிய நாடுகள் மூலோபாயம் , உள் பாதுகாப்பு மூலோபாய ஆய்வுகள் மாநில உறவுகள் மற்றும் அதன் தீவிரவாத வன்முறை , உலக நிர்வாகத்தில் இராணுவ செயற்பாடுகள் எனும் தலைப்புகளில் இந்த்கருத்தரங்கு இடம்பெறும்.

இந்த பாதுகாப்பு கருத்தரங்குகள் இராணுவ பயிற்சி பணியகத்தின் ஒத்துழைப்புடன் இராணுவ தளபதியின் மேற்பார்வையில் இடம்பெறும். மேலும் உலகத்தில் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக கருத்தரங்கில் ஆராயப்படும்.

இக்கருத்தரங்கிற்கு உயர் ஸ்தானிகர், உள்நாட்டு வெளிநாட்டு அரசியல்வாதிகள் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் கலந்து கொள்வர்.

Nike sneakers | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov