Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th November 2018 11:34:43 Hours

கிழக்கு பாதுகாப்பு படையினரால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வெல அவர்களின் வழிகாட்டலில் வம்மிவட்டுவான் ரிதிதென்ன கிரான் புலிபாஞ்சகல் மற்றும் புனானை போன்ற பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணச் சேவைகளை வழங்கும் நோக்கில் படையினர் நவம்பர் மாதம் 6-7ஆம் திகதிகளில் இப் பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் 18ஆவது இலங்கை தேசிய படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் தமித் பிரேமவன்ச அவர்களின் தலைமையில் வம்மிவட்டுவான் ரிதிதென்ன போன்ற பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்பிற்குள்ளான மக்களை மீட்கும் பொருட்டு பல படகுகள் போன்றன கடந்த செவ்வாய்க் கிழமை (06) மாலை வழங்கப்பட்டது. அதேவேளை 233ஆவது படைப் பிரிவினரால் உணவூகள் சமைத்து வழங்கப்பட்டதுடன் மீட்புப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் 12ஆவது இலங்கை தேசிய படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் சிஷ்ஷங்க தஹாநாயக்க அவர்களின் தலைமையில் கிரான் புலிபாஞ்சகல் போன்ற பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு படகுகளும் வழங்கப்பட்டது. இவை முதியவர்கள் கற்பிணித் தாய்மார்கள் பெண்கள் மற்றும் அங்கவீனமுற்ற பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை 7ஆவது பொறியியலாளர்;ப் படையினர் வெள்ளத்தினால் பாதிப்புற்ற புனானை புகையிரத நிலையத்தின் மீ;ட்புப் பணிகளை மேற்கொண்டனர். மேலும் வெள்ளநீர் பாதிப்பால் புகையிரதக் கடவை முற்றிலும் பாதிப்பிற்குள்ளாகிக் காணப்பட்டதுடன் இதனை திருத்தும் நோக்கில் புகையிரத சேவகர்கள் ஈடுபட்டதுடன் வெள்ளநீரு; பெருக்கத்தால் இப் பிரதேசம் பாதிப்பிற்குள்ளாகிக் காணப்பட்டது.

மேலும் 23ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் கபில உடலுபொல 7ஆவது பொறியியலாளர்ப் படையணியின் கட்டளை அதிகாரியவர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகள் பாதிப்பிற்குள்ளான பிரதேசங்கiபார்வையிடும் நோக்கில் இப் பிரதேசங்களிற்கு விஜயம் செய்தனர்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வெல அவர்களின் கண்காணிப்பின் கீழ் 23ஆவது 233ஆவது மற்றும் 232 போன்ற படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள் இவ் உடனடி நிவாரண மீட்புப் பணிகளை மக்களுக்கு உதவும் நோக்கில் செயற்படுத்தினர். bridgemedia | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ