Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st December 2017 20:58:34 Hours

கிளிநொச்சியில் இடம் பெற்ற கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வுகள்

அனைத்து மதங்களிடத்திலும் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் பேனும் நோக்கில் விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வானது கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப் பிரிவிரால் கிளிநொச்சி நெலும் பியஸ கேட்போர் கூடத்தில் கடந்த புதன் கிழமை (20) இடம் பெற்றது.

அந்த வகையில் 57ஆவது படைப் பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின்

ஆலோசனைக் கமைவாக 571ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியனா கேர்ணல் அஜித் கொலபதந்தீர் அவர்களின் கண்காணிப்பின் கீழ் இப் படைப் பிரிவினால் நத்தார் கிறிஸ்தவ கீதங்கள் ஒழுங்கு செய்யப்பட்டது.

இந்த நத்தார் வழிபாட்டு நிகழ்வில் யாழ் திருச்சபை அருட் தந்தை பி ஜே ஜெபரட்னம் மற்றும் மன்னார் திருச்சபை அருட் தந்தையான விக்டர் சூசை போன்றௌரால் இவ் வழிபாடுகள் இடம் பெற்றதுடன் கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவணவும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வுகளில் பாரதிபுரம் ஞானஸ்தான தேவாலயத்தின் நடனக் குழுவினரால் வரவேற்பு நடனம் இடம் பெற்றதுடன் அருட் தந்தை விக்ணேஷ்வரன் அவர்களால் புனித வேதாகமத்தின் வேத பாடங்கள் மூன்று மொழிகளிலும் போதிக்கப்பட்டதுடன் யாழ் திருச்சபை அருட் தந்தை பி ஜே ஜெபரட்னம் அவர்களால் நத்தார் வழிபாட்டிற்கான உரை நிகழ்த்தப்பட்டது.

மாலை வேளை இடம் பெற்ற இவ் வழிபாட்டு நிகழ்வானது சிங்களம் இ தமிழ் மற்றும் ஆங்கில் மொழிகளிலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை எடுத்துக் கூறும் வகையில் நத்தார் கரோல் கீதங்கள் கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பங்களிப்போடு பாரதிபுரம் ஞானத்ஸ்தான தேவாலய பாடல் குழுவினர் ,முருக்கண்டி புனித போல்ஸ் திருச்சபையின் பாடல் குழுவினர் ,செல்வநகர் வேதாக கிங்டம் அமைச்சு ,வலைபாடு புனித அந்தோனியார் திருச்சபை ,கிளிநொச்சி அங்கிலிக்கன் ,புனித திரேசா திருச்சபை ,பல்லிக்குடா அந்தோனியார் ஆலயம் போன்றவற்றின் பங்களிப்போடு இடம் பெற்றது.

இறுதியாக கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இனிதே இடம் பெற்ற இந் நத்தார் கிறிஸ்தவ கரோல் கீதங்கள் FelizNavidadஎனும் Harmony Christmas உடன் முடிவடைந்தது.

இவ்வாறு இனிதே முடிவடைந்த இந் நிகழ்வின் இறுதியில் நீர்கொழும்பு ரொட்டரிக் கழத்தினர் 150 பாடசாலை பைகளை சிறார்களுக்கு வழங்கி வைத்தனர். இதன் போது இவ் நத்தார் பாடல் குழுவினர் இரவுப் போசனத்தில் கலந்து கொண்டதுடன் யாழ்பாணத்தின் இந்திய உயர்த் ஸ்தானிகராலயத்தின் கவூண்சலர் ஜெனரல் திரு ஏ நடராஜா அவர்களால் உரையாற்றப்பட்டது.

இவ் 2017ஆம் ஆண்டிற்கான நத்தார் நிகழ்வுகளைப் பார்வையிட ந்திய உயர்த் ஸ்தானிகராலயத்தின் கவுண்சலர் ஜெனரல் திரு ஏ நடராஜா , 65ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன , 66ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலான ,இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

latest jordan Sneakers | GOLF NIKE SHOES