Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st November 2018 13:21:03 Hours

கிளிநொச்சியில் 57ஆவது படையினரால் புதிய வீடு நிர்மானித்து வழங்கல்

கிளிநொச்சிப் பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்களின் காரணமாக சுயமானதோர் வீட்டை நிர்மானிப்பதில் சிரமத்தை எதிர் கொண்ட சிங்களப் பெண்மணி ஒருவருக்கு 57ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 571ஆவது படைப் பிரிவின் 09ஆவது விஜயபாகு காலாட் படையினரால் புதிய வீடொன்று நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கிரிஹேன தெரணியகல பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி ஹேமலதா என்பவர் தனது கணவருடன் 1979ஆம் ஆண்டு வாழ்ந்து வாழ்ந்தார். மேலும் எல் ரீ ரீ ஈ யினரின் அச்சுருத்தலின் காரணமாக தமது நான்கு பிள்ளைகளுடனும் கிளிநொச்சியில் தஞ்சம் புகுந்தனர். மேலும் 1996 ஆண்டு காலப் பகுதியில் எற்பட்ட பயங்கரவாத தாக்குதலின் காரணமாக அகதி முகாமில் கிட்டத் தட்ட மூன்று முதல் நான்கு வருடங்கள் தங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சமூகத்தினரோடு ஒன்றிணைந்து காணப்பட்ட இவர் மரக்கறி வகைகளை சந்தையில் விற்று நாளாந்த வருமானத்தை ஈட்டினார்.

மேலும் 2009வரை எல் ரீ ரீ ஈ யினரின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட கிருஷ்ணபுரத்தில் குடில் அமைந்து வாழ்ந்து வந்த இத் தம்பதியினருக்கு 57ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய அவர்கள் புதிய வீடொன்றை நிர்மானித்து வழங்கியுள்ளார். Sport media | Women's Nike Air Max 270 React trainers - Latest Releases , youth boys nike sunray sandals clearance outlet