Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2018 12:39:48 Hours

கிளிநொச்சிப் படையினர் கியோஷி ரை பூடோவில் பயிற்சிகளைப் பெற்றனர்

கியோஷி ரை பூடோவில் 1ஆம் மற்றும் 2ஆம் பயிற்ச்சிகளில் பச்சை மற்றும் மஞ்சல் நிற திறமை பட்டிகளைப் பெற்ற படையினருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வியாழக் கிழமை (11) கிளிநொச்சி நெலும் பியஸ கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இப் பயிற்ச்சியானது படையினரின் தற்பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இடம் பெற்றதாகும்.

இப் பயிற்ச்சிகளின் முதல் பயிற்ச்சியானது 57ஆவது படைத் தலைமைய ரியோட் கட்டுப்பாட்டு படையிரால் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி இடம் பெற்றது.

அந்த வகையில் 7ஆவது இலேசாயூத காலாட் படையணியின் 4 அதிகாரிகள் மற்றும் 150 படை வீரர்கள் ,9ஆவது விஜயபாகு காலாட் படையணி ,17ஆவது (தொண்டர்) கஜபா படையினர் மற்றும் 14ஆவது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியைச் சேர்ந்த படையினர் கியோஷி ரை பூடோவில் 7ஆவது மட்டத்திற்கு தேர்வானதுடன் பச்சை நிறப் பட்டியையூம் பெற்றுள்ளனர்.

மேலும் 57,65 மற்றும் 66ஆவது படைத் தலைமையகங்களின் 8அதிகாரிகள் உள்ளடங்களாக 224 சாதாரணப் படையினர் திறமையூடன் தமது பயிற்சிகளை (1) ஒன்று மற்றும் (2) இரண்டு மட்டங்களில் 8ஆம் தரத்தில் கியோஷி ரை பூடோவில் மஞ்சல் நிறப் பட்டியைப் பெற்றுள்ளனர்.

இவ் கியோஷி ரை பூடோவிற்கான பயிற்ச்சிகளை உலக குத்துச் சண்டை அமைப்பின் (றுமுடீகு) தலைவரும் இராணுவ கராத்தே அமைப்பின் மேலதிக பயிற்றுனருமான திரு சின்ஹா சிலிமென்ட் டி சொய்சா கறுப்பு நிறப் பட்டி 8 டாண் அவர்களும் இலங்கை இராணுவ கராத்தே கழகத்தின் பயிற்றுனர்களும் இலங்கை பொறியியலாளர்ப் படையணியின் கராத்தே கழகத்தின் பயிற்றுவிப்பாளர்களும் வழங்கியுள்ளனர்.

அத்துடன் கியோஷி ரை பூடோவிற்கான திறமை மிக்க பயிற்சிகள் படையினரின் பங்களிப்போடு இடம் பெற்றது.

அந்த வகையில் இந் நிகழ்வில் 57ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் அழைப்பை ஏற்று மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவண அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் 56ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெல , கிளிநொச்சி பாதுகாப்பு பராமரிப்பு கட்டுப்பாட்டு அதிகாரியான பிரிகேடியர் எச் ஜி ஐ வித்தியாநத்த அவர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அனைத்து கட்டளை அதிகாரிகளும் படையினரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் இறுதியில் 57ஆவது படைத் தலைமைய கட்டளை அதிகாரியவர்களால் திரு சின்ஹா சிலிமென்ட் டி சொய்சா அவர்களுக்கு நினைவுச் சின்னத்தையும் வழங்கி வைத்தார்.

buy shoes | Nike Air Force 1 Shadow White/Atomic Pink-Sail For Sale – Fitforhealth