Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd June 2018 20:32:09 Hours

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நிறைவு

கிளிநொச்சி முன் பராமரிப்பு பகுதி தலைமையகத்தினரால் ஏற்பாடு செ;ய்யப்பட்ட விளையாட்டு போட்டி மே மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை கிளிநொச்சி மத்திய மகா வித்தியால விளையாடடு மைதானத்தில் இடம் பெற்றது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பயிற்ச்சி திட்டத்தின் படி இந்த விளையாட்டு போட்டிக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம், 57 ஆவது படைப் பிரிவு 65 ஆவது படைப் பிரிவு 66 ஆவது படைப் பிரிவு மற்றும் கிளிநொச்சி முன் பராமரிப்பு பகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இராணுவ மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிக்கு பலர் கலந்து கொண்டனர்.

இப் போட்டியில் மரதன் ஒட்டம், குழுக்களுக்காக ஒட்டம், நிண்ட தூரம் ஓட்டம், உயரம் மற்றும் தூரம் பாய்தல், குண்டு எறிதல், ஜாவேலின் டிஸ் எறிந்தல் போன்ற பல விதமான 17 விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றதுடன், ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் இப் போட்டிகளில் இராணுவ விளையாட்டு வீர வீரங்கனைகள் தங்களது திறமையை வெளிக் காட்டினர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் விளையாட்டு போட்டியில் 57 ஆவது படைப் பரிவு வெற்றிப் பெற்றது.

இறுதி போட்டி (02) ஆம் திகதி சனிக் கிழமை கிளிநொச்சி மத்திய மகா வித்தியால விளையாடடு மைதானத்தில் இடம் பெற்றதுடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிப் புரியும் அனைத்து விளையாட்டு வீரர்கள் புதிய வீரர்களின் எதிர் பார்ப்புடன் போட்டிகள் முடிவுக்கு வந்தனர்.

இந் நிகழ்விற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவன கலந்து கொண்டு, மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் இப் போட்டியில்,அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்கள் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அடைய முடியும் என்பதை நன்கு வெளிப்படுத்தினர்.

இந்த மூன்று நாள் தொடர் விளையாட்டில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், 500 100 x 4, மீட்டர் 200 x 4, மீட்டர் நீண்ட தூர ஓட்டம், உயரம் மற்றும் நீண்ட தூரம் பாய்தல், ஜாவெலின் வீசுதல், டிஸ் எறிந்தல், கயிறுலுத்தல் போன்றன இடம் பெற்றனர்.

இந்த போட்டியில் மிகவும் திறமையான வீராங்கனையாக 6 ஆவது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சாஜென்ட் டபில்யூ.எம் கருணாவதி தேர்ந்தெடுக்கப்பட்டார். திறமையான வீரராக 6 ஆவது சிங்க படையணியின் கோப்ரல் டபில்யூ. ஆர்.எம் ரணவக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப் இறுதியில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளால் வெற்ற பெற்றவர்களுக்கு சான்றிதல்கள் மற்றும் வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது.

இம் மெய்வல்லுனர் போட்டியில் நிகழ்வின் தொடக்க விழாவானது கடந்த (31) ஆம் திகதி இடம பெற்றதில் பிரதான அதிதியாக கிளிநொச்சி முன் பராமரிப்பு பகுதியின் கட்டளை தளபதி பிரிகேடியர் இந்ரஜீத் வித்தியானந்த கலந்து கொண்டார்.

short url link | Nike Shoes