Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd December 2017 20:24:10 Hours

காலம் சென்ற தேரர் அவர்களது இறுதிக் கிரிகைகளுக்கு ஒத்துழைப்பை வழங்கிய யாழ்ப் படையினர்

காலம் சென்ற யாழ் ஸ்ரீ நாக விகாரையின் பிரதான விகாராதிபதியான மெகஹாஜிந்துரை குணரத்தின தேரர் அவர்களின் இறுதிக் கிரிகையானது யாழ்ப் பாதுகாப்புப் படைத் தலைமையத்தின் ஒருங்கிணைப்பில் மகா சங்கத்தினரின் பங்களிப்போடு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கி யாழ் முத்தவெலி மைதானத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (22) இடம் பெற்ற இவரது இறுதிக் கிரிகைகளில் படையினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அன்னாரது பூத உடல் ஸ்ரீ நாக விகாரை வளாகத்தில் இருந்து பி .ப 1.45 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதுடன் இவ் இறுதிச் சடங்கில் பலதரப்பட்ட அரச அதிகாரிகள் , முப்படையினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது பிரதம பௌத்த குருமார்கள் நல்லிணக்கத்தையும் ஒன்றினைப்பையும் நீண்டதோர் சமாதானத்தை யாழில் உருவாக்கும் நோக்கில் பலதரப்பட்ட பிரதான பௌத்த தேரர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இவ் இறுதிக் கிரிகைகளில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியனா மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்கள் அன்னாரின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் காலம் சென்ற தேரர் அவர்கள் 1991ஆம் ஆண்டிலிருந்து யாழ் நாக விகாராதிபதியாக தலைமை தாங்கியதுடன் இவர் யாழ் பொது மக்களுடனும் நல்லுரவைப் பேணிவந்துள்ளார்.

இதன் போது இந்து குருக்கள் கத்தோலிக்க போதகர்கள் மற்றும் இஸ்லாமிய மௌலவி போன்ற மத குருமார்கள் கலந்து கொண்டர்.

மேலும் வட மாகான ஆளுனர் கௌரவமிக்க ரெஜிநால்ட் குரே ,யாழ் மாவட்ட செயலாளர் திரு என் வேதநாயகம் ரியர் அட்மிரால் டி சில்வா ,வடக்கு பாதுகாப்புப் படைத் தளபதி ,கெப்டண் எல் எச் சுமணவீர ,பலாலி விமானப் படையின் கட்டளை அதிகாரி மற்றும் பொது மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

Running sports | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE