Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th August 2017 11:30:22 Hours

காலம் சென்ற ஜெனரல் டெனிஸ் பெரேரா அவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

முப்படைக்கான ஓய்வு பெற்ற அதிகாரிகள் சங்கத்தினால் காலம் சென்ற ஜெ ஈ ஜெனரல் டெனிஸ் பெரேரா அவர்களின் நினைவு தினம் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (11) இடம் பெற்றது.

இந் நிகழ்வின் முதல் அங்கமாக காலம் சென்ற இராணுவ அதிகாரியவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முப்படைக்கான ஓய்வு பெற்ற அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான ரியர் அட்மிரால் எச் எஸ் ரத்தினகீர்த்தி அவர்களினால் வரவேற்புரை நிகழ்தப்பட்டதுடன் மேற்படி காலம் சென்ற இராணுவ அதிகாரியின் துரைவியான திருமதி ரஞ்சனி பெரேரா போன்றௌரும் கலந்து கொண்டு அன்னாரிற்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் இராணுவத் தளபதியவர்கள் இதன் போது கலந்து கொண்டு காலம் சென்ற இராணுவ அதிகாரியவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அனைத்து பாதுகாப்பு படைகளிற்குமான ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதன் மூலம் வன்முறைகளுக் கெதிராக செயற்பட இயலும் என கூறினார்.

காலம் சென்ற முன்னய இராணுவத் தளபதியான ஜெ ஈ ஜெனரல் டெனிஸ் பெரேரா அவர்கள் 11ஆம் திகதி ஓகஸ்ட் மாதம் 2013 வருடம் தமது 83ஆவது வயதில் காலமடைந்தார்.

மேலும் இவர் சிலோன் இராணுவத்தில் 10ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 1949 வருடம் தமது 19ஆவது வயதில் இணைந்தார். இவர் தமது கல்வியை சென் பீட்டஸ் கல்லுாரியில் நிறைவு செய்ததுடன் , ரோயல் பாதுகாப்ப அக்கடமியில் சந்குருட்ஸ் இல் தமது பயிற்சிகளை முடித்து இராணுவ 1ஆவது பொறியியலாளர் படையணியில் இணைந்து பிரித்தானிய இராணுவத்தில் உட்சேர்க்கப்பட்டார். மேலும் இவர் பிரித்தானிய இராணுவ கம்பேலி கல்லுhரியில் தமது பட்டப் படிப்பை நிறைவு செய்ததுடன் காலம் சென்ற இராணுவத் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் ரிச்சட் உடுகம அவர்களின் கீழ் கிழக்கின் கல் ஓய பிரச்சினைகள் இடம் பெற்ற வேளையில் சேவையாற்றியுள்ளார்.

பின்னர் இவர் லண்டனில் உள்ள இலங்கை இராணுவத்தில் இணைக்கப்பட்டதுடன் 1997 முதல் 1981ஆவது வருடம் வரை இராணுவத் தளபதியாக சேவையாற்றினார்.

மேலும் இவர் தமது இராணுவ சேவையிலிருந்து ஓய்வூ பெற்றதன் பிற்பாடு இலங்கையின் அவூஸ்திரேலிய உயர் ஸ்தானிகராக கடமையாற்றினார். அதன் பின்னர் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக் கழத்தின் வேந்தராக 1995 முதல் 2000 ஆண்டு வரை கடமையாhற்றியதுன் இதன் முன்னோடியாகவும் காணப்பட்டார். நாட்டிற்கான இவரது சேவையினைத் தொடர்து இவர் தேசமானியாக 2000 கருதப்பட்டதுடன் . முப்படைக்கான ஓய்வூ பெற்ற அதிகாரிகள் சங்கத்தினன் முன்னய தலைவராகவும் காணப்பட்டார்.

இந் நிகழ்வின் இறுதியில் இச் சங்கத்தின் உப தலைவரான மேஜர் ஜெனரல் எல் சி ஆர் குணவர்தன (ஓய்வு) அவர்களால் நன்றியுரையும் நிகழ்த்தப்பட்டது.

இதன் போது கடற்படை தளபதியவர்கள் மற்றும் மேலும் ஓய்வு பெற்ற பல உயர் அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

Nike Sneakers Store | Women's Nike Air Max 270 trainers - Latest Releases